2.5 மில்லியன் டொலர் மோசடியைக் கண்டறிந்த அதிகாரி மர்மச் சாவு!


இலங்கை திறைசேரியில் இடம்பெற்ற 2.5 மில்லியன் டொலர் சைபர் மோசடி விவகாரத்தை முதன் முதலாக கண்டுபிடித்த அதிகாரியான ரங்க ராஜபக்ச இன்று திடீரென மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். இந்த மரணம் கொழும்பு அரசியலிலும், நிதித்துறையிலும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.


வெளிநாட்டு வளங்கள் திணைக்களத்தின் பணிப்பாளராகப் பணியாற்றிய ரங்க ராஜபksa, ஆஸ்திரேலியாவிற்குச் செலுத்த வேண்டிய 22.9 மில்லியன் டொலர் கடன் தொகையில், 2.5 மில்லியன் டொலர் மோசடியான முறையில் ஒரு மர்மமான வங்கிக் கணக்கிற்குத் திசைதிருப்பப்பட்டதை முதன்முதலில் கண்டறிந்தவர். இது குறித்துக் குற்றவியல் புலனாய்வுத் திணைக்களத்தில் (CID) துணிச்சலாகப் புகார் அளித்ததும் இவரே.


அரச நிதி அமைப்பில் உள்ள பாதுகாப்பு ஓட்டைகள் மற்றும் நிதி கையாடல் செய்யப்பட்ட விதம் குறித்த இரகசியத் தகவல்களை ரங்க ராஜபக்ச கொண்டிருந்தார். எனினும், விசாரணை வளையத்திற்குள் இருந்த திணைக்களத்தைச் சேர்ந்தவர் என்பதால் அவர் அண்மையில் பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டிருந்தார்.


இந்த நிலையில், அவர் இன்று திடீரென உயிரிழந்துள்ளமை இது தற்கொலையா, இயற்கையான மரணமா அல்லது சாட்சியங்களை அழிப்பதற்காகத் திட்டமிடப்பட்ட கொலையா என்ற சந்தேகத்தை எழுப்பியுள்ளது.


#BreakingNews #SriLankaNews #TamilNews

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.