யாழில் கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து சுமார் 25 லீட்டருக்கும் அதிகமான கசிப்பு!

 


யாழ்ப்பாணத்தில் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டு வந்த பெண்ணும் , அவருக்கு உதவியாளராகவும் விற்பனையாளராகவும் செயற்பட்ட ஆணொருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். 


கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து சுமார் 25 லீட்டருக்கும் அதிகமான கசிப்பு மற்றும் கசிப்பு காய்ச்சுவதற்கு பயன்படுத்திய உபகரணங்கள் என்பவற்றை பொலிஸார் மீட்டுள்ளனர்.


நாயன்மார்கட்டு பகுதியில் பெண்ணொருவர் வீடொன்றில் நீண்ட காலமாக கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டு வருவதாக யாழ்ப்பாண பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில், குறித்த வீட்டினை இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை முற்றுகையிட்டு , சோதனை நடாத்தினர்.


அதன் போது வீட்டில் இருந்து 25 லீட்டருக்கும் அதிகமான கசிப்பும் , அதனை காய்ச்சுவதற்கு பயன்படுத்திய பாத்திரங்கள் , எரிவாயு சிலிண்டர் , எரிவாயு அடுப்பு , பெரியளவிலான கிடாரம் உள்ளிட்டவற்றை பொலிஸார் மீட்டுள்ளனர். 


அதனை அடுத்து கசிப்பு காய்ச்சிய குற்றத்தில் பெண்ணை கைது செய்ததுடன் , வீட்டில் இருந்த ஆணையும் கைது செய்துள்ளனர். 


கைது செய்யப்பட்டவர்களிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் , ஆண் , கசிப்பு காய்ச்சுவதற்கு உதவுவதுடன் , காய்ச்சிய கசிப்பினை வெளியிடங்களுக்கு கொண்டு சென்று விற்பனை செய்பவர் என தெரியவந்துள்ளது. 


கைது செய்யப்பட்ட இருவரையும் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். 

Imesha Prabodani

#BreakingNews #police #Jaffna #SriLankaNews

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.