செம்மணி மனிதப்புதைகுழி அகழ்வாராய்ச்சி – கட்டம் 3 | நாள் 6📸


யாழ்ப்பாண நீதவான் எஸ். லெனின்குமாரின் மேற்பார்வையில் இன்று அகழ்வுப் பணிகள் தொடர்ந்தன. இதன்போது மேலும் 2 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டன.


ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட 3 எலும்புக்கூடுகள் இன்று முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டன.


அகழ்வுப் புள்ளிவிபரங்கள்:

மூன்று கட்டங்களையும் உள்ளடக்கி இதுவரை மொத்தம் 245 எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அவற்றில் 243 எலும்புக்கூடுகள் இதுவரையில் முழுமையாக மீட்கப்பட்டுள்ளன.


தடயவியல் அகழ்வுத் தளம் 1: 234 எலும்புக்கூடுகள்


தடயவியல் அகழ்வுத் தளம் 2: 9 எலும்புக்கூடுகள்


தொல்பொருள் ஆய்வாளர் பேராசிரியர் ராஜ் சோமதேவ மற்றும் சட்டவைத்திய அதிகாரி (JMO) டாக்டர் பிரணவன் செல்லையா ஆகியோரின் பங்களிப்புடன் இந்த அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.









#செம்மணிமனிதப்புதைகுழி #இலங்கை #மனிதஉரிமைகள் #புத்தக #புதிய 



கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.