கிளிநொச்சியில் மனைவி விவாகரத்து கோரியதால் கணவன் செய்த விசித்திரமான செயல்.!


கிளிநொச்சி - செல்வாநகர் பகுதியில் தனது மனைவி விவாகரத்து கோரியதால் ஏற்பட்ட கோபத்தில், அவரது வீட்டிலிருந்த தென்னை மரங்களைக் கணவன் வெட்டி வீழ்த்தியுள்ளார்.


மூன்று பெண் பிள்ளைகளின் தாயான இப்பெண், தனது கணவரிடமிருந்து #விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்துள்ளார். இவ்வழக்கு தற்போது நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில், மனைவி மீதான #கோபத்தில் கணவன் இச்செயலைச் செய்துள்ளார்.


இச்சம்பவம் வௌ்ளிக்கிழமை (01) இரவு இடம்பெற்றுள்ளதாக பாதிக்கப்பட்ட பெண் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். 


இரவு வேளையில் திருட்டுத்தனமாகக் காணிக்குள் புகுந்த எனது கணவர், மரம் வெட்டும் இயந்திரம் மூலம் தென்னை மரங்களை #வெட்டி வீழ்த்தியுள்ளார். #காய்க்கும் நிலையில் இருந்து, எனது வீட்டுத் தேவைகளைப் பூர்த்தி செய்து வந்த மரங்களையே அவர் இவ்வாறு #அழித்துள்ளார் என மனைவி தெரிவித்துள்ளார்.


"மனைவி பிரிந்து செல்கிறார் என்ற கோபத்தை மரங்களின் மீது காட்டுவது வீரமல்ல. குடும்பப் பிரச்சினைகளை நீதிமன்றத்தில் அல்லது சமூகப் பெரியவர்கள் முன்னிலையில் பேசித் தீர்ப்பதே நாகரிகமான செயல்."

📢 மறக்காமல்

Tamilarul.Net

Like 👍 Share 🔄 Subscribe 🔔


#Kilinochchi #Selvanagar #Justice #StopViolence #DomesticDispute #NatureProtection #SriLanka #கிளிநொச்சி #விழிப்புணர்வு #மனிதாபிமானம் #kilinochchinews #NewsUpdate #SriLankaTamilNews

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.