அதிரடி வேட்டை - கொழும்பில் சிக்கிய சீன 'சைபர்' கும்பல்!
கொழும்பு - தலங்கம பகுதியில் சொகுசு பங்களாவை வாடகைக்கு எடுத்து, ரகசியமாக இயங்கி வந்த பாரிய இணையதள மோசடி (Online Fraud) கும்பலை பொலிஸார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர்!
நடந்தது என்ன?
தலங்கம, கொஸ்வத்தை பகுதியில் உள்ள வீடொன்றில் மர்மமான முறையில் சீனப் பிரஜைகள் தங்கியிருப்பதாக வலான மத்திய ஊழல் ஒழிப்புப் பிரிவினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதனையடுத்து, பொலிஸார் மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பில் பெண் ஒருவர் உட்பட 37 சீனப் பிரஜைகள் கையும் மெய்யுமாக பிடிபட்டனர்!
கைப்பற்றப்பட்ட 'டெக்' ஆயுதங்கள்!
அந்த சொகுசு வீட்டிற்குள் நுழைந்த பொலிஸார் அதிர்ச்சியடைந்தனர். அங்கு ஒரு மினி 'கால் சென்டரே' இயங்கி வந்துள்ளது..
♦️35 டெஸ்க்டொப் கணினிகள்
♦️37 டேப்லட்கள்
♦️147 ஸ்மார்ட்போன்கள்
♦️100 சிம் கார்டுகள்
♦️கூடுதலாக 2,100 சட்டவிரோத சிகரெட்டுகளும் பறிமுதல்!
சுற்றுலா விசாவில் வந்து கைவரிசை!
கைது செய்யப்பட்டவர்கள் 3 மாத கால சுற்றுலா விசாவில் இலங்கைக்கு வந்துள்ளனர். தங்கியிருந்த காலப்பகுதியில் இவர்கள் சர்வதேச அளவில் பணப் பரிமாற்ற மோசடிகளில் ஈடுபட்டனரா அல்லது ஹேக்கர்களாக (Hackers) செயல்பட்டார்களா என்பது குறித்து CID தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறது.
💥தற்போது அந்த வீடு சீல் வைக்கப்பட்டுள்ளதுடன், சந்தேகநபர்கள் அனைவரும் கடுவலை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.
📢 மறக்காமல்
Tamilarul.Net
Like 👍 Share 🔄 Subscribe 🔔
#SriLankaNews #BreakingNews #OnlineFraud #CyberCrime #ChinaScam #ColomboAlert #Thalangama #PoliceRaid #SriLankaPolice #DigitalScam #TrendingNews #LankaUpdate #TechCrime

.jpeg
)





கருத்துகள் இல்லை