பச்சிளங்குழந்தை விபத்தில் பலி!!

 


நிட்டம்புவ - ருவன்வெல்ல வீதியின் கோனகல பகுதியில் முச்சக்கரவண்டி ஒன்று கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், 3 மாதக் குழந்தை பரிதாபமாக உயிரிழந்துள்ளது.

நேற்று (21) பகல் இந்த விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். விபத்தின்போது வாகனத்தின் பின்இருக்கையில் பயணித்த பெண்ணும், அவரது குழந்தையும் பலத்த காயங்களுக்கு உள்ளான நிலையில் அவிசாவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

எனினும், அங்கு சிகிச்சை பலனின்றி 3 மாதமேயான பெண் குழந்தை உயிரிழந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்த குழந்தை கோனகல பகுதியைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகிறது. விபத்து தொடர்பில் முச்சக்கரவண்டி சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், ருவன்வெல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.