சீரனற்ற காலநிலையால் நீர்த்தேக்கம் உயர்வு!!

 


காசல்ரீ மற்றும் மவுசாக்கலை ஆகிய முக்கிய நீர்த்தேக்கங்களின் நீரேந்துப் பகுதிகளில் பெய்து வரும் பலத்த மழை காரணமாக, அவற்றின் நீர்மட்டம் கணிசமாக உயர்வடைந்துள்ளதாக நீர்த்தேக்கப் பொறுப்பதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நேற்று வியாழக்கிழமை (21) மவுசாக்கலை நீரேந்துப் பகுதியில் 27 மில்லி மீற்றர் மழைவீழ்ச்சியும் காசல்ரீ நீரேந்துப் பகுதியில் 31.5 மில்லி மீற்றர் மழைவீழ்ச்சியும் குறிப்பிடத்தக்க அளவு மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது.

கடந்த சில நாட்களாக நிலவிய வறட்சியான காலநிலை காரணமாக இந்த நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் பெருமளவில் குறைந்திருந்த நிலையில், தற்போது பெய்து வரும் தொடர் மழை நீர்மின் உற்பத்தியை சீராகப் பேண சாதகமாக அமைந்துள்ளதாக பொறியியலாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இன்று வெள்ளிக்கிழமை (22) முற்பகல் 6.00 மணி நிலவரப்படி தற்போதைய நீர்மட்டமானது மவுசாக்கலை நீர்த்தேக்கத்தில் வான் பாயும் மட்டத்திற்கு இன்னும் 47.9 அடி குறைவாகக் காணப்படுவதோடு, காசல்ரீ நீர்த்தேக்கத்தில் வான் பாயும் மட்டத்திற்கு இன்னும் 23.6 அடி குறைவாகக் காணப்படுகிறது.


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.