தோல்விகளை வெற்றிகளாக்கி முன்னேறுங்கள் சீமான்!

 -1987 இல் வடமராட்சியினை இலங்கைப்படைகள் கைப்பற்ற புலிகளின் கதை முடிந்தது என நான் உட்பட பலர் நினைத்தனர்.


🔥மில்லர் என்னும் வீரன் வந்தான்.


-இலங்கை/இந்திய ஒப்பந்தம், ஆயுதக்களைவு,

தீலிபனின் ஈகச்சாவு, புலேந்திரன், குமரப்பா உட்பட பன்னிருவேங்கைகளின் வீரச்சாவு என புலிகள் பலமிழந்ததான ஒரு கதை தோன்றுகின்றது.


🔥வெறும் ஆயிரத்திற்கும் குறைவான சாறம் கட்டிய பெடியள் எழுதிய வரலாறு வரலாற்றையே விஞ்சியது.


-1996 இல் யாழ் மாவட்டத்தை விட்டு புலிகள் வெளியேறவும் புலிகள் பலமிழந்தார்கள் என தமிழர்கள் நம்பினார்கள்.


🔥முல்லைத்தீவு பெருந்தளம் வீழ்ந்து வன்னி புலிகளின் கட்டுப்பாட்டிற்குள் செல்கின்றது.


🔥இலங்கை அரசின் கனவுக்கோட்டையான ஆனையிறவு வீழ்ந்த கதையும் வரலாறுதான்.


சீமான் அவர்களே.


நீங்கள் நேசிக்கும் உங்கள் தலைவரும், போராளிகளும் தம் மூன்றிற்குமேற்பட்ட தசாப்த போரியல் வரலாற்றில் எதிர்கொண்ட சவால்களும், அதை எதிர்த்துநின்று வென்ற கதையும் வரலாறெங்கும் நிறைந்துகிடக்கின்றது.


இந்த உலகினையே எதிர்த்துநின்றவர்கள் அவர்கள்.

தோல்விகளையும் , துரோகங்களையும் எதிர்கொண்ட போதும் எதிருகளுடன் சமரசமற்று போரிட்டவர்கள் அவர்கள்.



வெற்றி தோல்வி என்பதற்கப்பால் அவர்கள் எழுதிவைத்த வரலாற்றை எந்தக்கொம்பனாலும், எந்த மசிராண்டியாலும் அசைத்துப்பார்க்கமுடியாது.


தலைவர் எதிர்கொண்ட சிக்கல்களில் வெறும் பத்துவீதம் கூட நீங்கள் இதுவரை எதிர்கொள்ளவில்லை என்பதே என் கருத்து.


தோல்விகளை வெற்றிகளாக்கி முன்னேறுங்கள் சீமான்,

நீங்கள் நேசிக்கும் தலைவனைப்போல..

Nadarajah Anparasan

​🌐 இணையதளம்: www.Tamilarul.Net

​📢 தொடர்பு கொள்க:

​Facebook: Like 👍

​Share: 👥

​YouTube: Subscribe 🔔


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.