இயக்கச்சி இராணுவச் சிப்பாய்க்கு முழு இறுதி இராணுவ மரியாதை!!

 


புகையிரத விபத்தில் உயிரிழந்த இயக்கச்சி இராணுவச் சிப்பாய்க்கு முழு இறுதி இராணுவ மரியாதை!!


புகையிரத விபத்தில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்த இலங்கை இராணுவத்தின் பொறியியல் சேவைப் படையணியின் லான்ஸ் கோப்ரல் ஏ.பீ. மரியலூஜிசனின் உடலுக்கு இறுதி இராணுவ மரியாதை கடந்த வெள்ளி (01/05) அன்று கிளிநொச்சி, இயக்கச்சி பிரதேசத்திலுள்ள சாவத்தி பொது மயானத்தில் இடம்பெற்றது.


2014 ஜூன் 01 ஆம் திகதி இலங்கை இராணுவத்தில் இணைந்துகொண்ட லான்ஸ் கோப்ரல் மரியலூஜிசன் 12 வது (தொண்டர்) பொறியியல் சேவைப் படையணியில் இணைக்கப்பட்டதன் பின்னர் அங்கு பணியாற்றி வந்த நிலையில், முறிகண்டி பிரதேசத்தில்  கடந்த மாதம் (19/04) இடம்பெற்ற புகையிரத விபத்தில் படுகாயமடைந்திருந்தார்.


விபத்தின் பின்னர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் உயிரிழந்தார்.


உயிரிழந்த சிப்பாய்க்கு இறுதி மரியாதை செலுத்துவதற்காக இராணுவ சிரேஷ்ட அதிகாரிகள், சிப்பாய்கள், பிரதேசவாசிகள் மற்றும் உறவினர்கள் என பெருமளவிலானோர் கலந்துகொண்டனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.