யாழில் பியர் போத்தலினால் தாக்கப்பட்டு இளைஞன் கொலை.!


யாழ்ப்பாணம் - குருநகர் புதுமைமாதா ஆலயத்திற்கு அண்மித்த பகுதியில் நேற்று இரவு (03) இத் அதிர்ச்சி சம்பவம் இடம்பெற்றுள்ளது.அதே பகுதியைச் சேர்ந்த எபிசியஸ் ஜெஸ்மன் (வயது-36) என்ற நபரே உயிரிழந்துள்ளார்.


நேற்று (03) இரவு நண்பர்கள் அனைவரும் புதுமைமாதா ஆலயத்திற்கு அருகாமையில் இருந்து மது அருந்திய போது ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தில் பியர் போத்தலினால் சக நண்பரின் தலையில் அடித்துள்ளார்.


காயமடைந்தவர் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது. தகவலின்படி சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார், குறித்த இளைஞனை யாழ் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்த போது அவர் #உயிரிழந்துவிட்டார்.


தா-க்குதலை மேற்கொண்ட அதே இடத்தைச் சேர்ந்த சந்தேக நபரை யாழ்ப்பாணம் பொலிஸார் கைது செய்துள்ளனர்.


விசாரணையின் பின்னர் யாழ் நீதிவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.