குட்டி தேவதையின் உயிரை பறித்த காட்டு யானை!


பொலன்னறுவை, அரலகங்வில பகுதியில் நேற்று (04) அதிகாலை வீடு ஒன்றின் மீது காட்டு யானை நடத்திய #தாக்குதலில், வீட்டின் சுவர் இடிந்து விழுந்து அதனுள் சிக்கி 5 வயது சிறுமி ஒருவர் #உயிரிழந்துள்ளார்.


அதிகாலை காட்டு யானை வீட்டைத் #தாக்கும் சத்தம் கேட்டுள்ளது. அப்போது சிறுமியுடன் தூங்கிக்கொண்டிருந்த தாய், விளக்கை ஒளிர்விப்பதற்காக எழுந்த சென்ற சமயம் யானை வீட்டின் சுவரைத் #தாக்கியுள்ளது.


இதில் சுவர் இடிந்து சிறுமியின் #த-லையில் விழுந்ததில் பலத்த காயமடைந்த #சிறுமி சம்பவ இடத்திலேயே #உயிரிழந்துள்ளதாக பொலிஸார் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.


இச்சம்பவம் குறித்து #அரலகங்வில பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.


முன்பள்ளி மாணவியான இந்த தேவதையின் #உயிரிழப்பு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


↪காட்டு யானைகள் நடமாடும் பகுதிகளில் வசிப்போருக்கான பாதுகாப்பு ஆலோசனைகள்👇


🛑யானைகள் நடமாடும் பகுதிகளில் இருப்பவர்கள், வீட்டின் வெளிப்புறச் சுவர்களுக்கு (External Walls) மிக அருகாமையில் கட்டில்களைப் போட்டு உறங்குவதைத் தவிர்க்க வேண்டும். குறிப்பாகப் பலவீனமான சுவர்கள் உள்ள வீடுகளில் உட்புறமாக உறங்குவது ஓரளவு பாதுகாப்பானது.


🛑நெல், தானியங்கள், பலாப்பழம் மற்றும் சமையல் அறையிலிருந்து வரும் மணம் யானைகளை ஈர்க்கும். எனவே, தானியங்களை உறங்கும் அறைகளில் சேமித்து வைப்பதைத் தவிர்க்கவும்.


🛑இரவு நேரங்களில் வீட்டைச் சுற்றி போதிய வெளிச்சம் இருப்பது அவசியம். யானைகள் நடமாடும் பகுதிகளில் இரவு வேளைகளில் கதவு மற்றும் ஜன்னல்கள் அருகே லைட் (Torch light) அல்லது அவசர விளக்குகளை எப்போதும் தயாராக வைத்திருக்கவும்.


🛑வீட்டைச் சுற்றி அடர்த்தியான புதர்கள் அல்லது மரங்கள் இருந்தால் அவற்றை அகற்றிச் சுத்தமாக வைத்திருக்கவும். அப்போதுதான் தூரத்திலேயே யானையின் வருகையை அவதானிக்க முடியும்.


🛑உங்கள் கிராமத்தில் யானை வேலிகள் இருந்தால், அவை முறையாகச் செயல்படுவதை உறுதிப்படுத்துங்கள்.


🛑கிராமத்தில் யானை புகுந்துள்ளதை அறிந்தால், உடனடியாக அருகில் உள்ளவர்களுக்கும் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளுக்கும் தகவல் வழங்குங்கள்.


"நிழலாய் இருந்த சுவரே சிறுமிக்கு எமனாக மாறியது கொடுமை, மனித-யானை மோதலுக்கு நிரந்தரத் தீர்வு எப்போது? அதிகாரிகளே விழித்தெழுங்கள்!"


#Polonnaruwa #HumanElephantConflict #Aralaganwila #SafetyAwareness #SriLanka #WildlifeConflict #யானைதாக்குதல் #விழிப்புணர்வு #பொலன்னறுவை #பாதுகாப்பு #SriLankaNews

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.