விஜய் அவர்களை வாழ்த்திப் பா இயற்றினார் கவிப்பேரரசு வைரமுத்து!



‘வெற்றி பெற்ற

விஜய் அவர்களே!


கலை உலகின்

சகபயணி என்ற முறையில்

உங்களை வாழ்த்துகிறேன்


உலகத் தமிழர்கள் 

உற்றுப் பார்க்கும் வெற்றி

உங்களுடையது


வெற்றி - தோல்வி

இரண்டுமே பாரங்கள்


தோல்வி என்பது

முதுகில் சுமக்கும் பாரம்;

வெற்றி என்பது

தலையில் சுமக்கும் பாரம்


சமூகம்

உங்களிடம் எதிர்பார்க்கிறது


மக்கள் உங்களுக்கு

வாக்களிக்கும் முன்பே

மக்களுக்கு நீங்கள்

வாக்களித்து விட்டீர்கள்


அந்த வாக்குகளை 

நிறைவேற்றுவதில் இருக்கிறது

உங்கள் ஆட்சியின் மாட்சி


உங்கள்

கட்சிக்கும் ஆட்சிக்கும்

வாழ்த்துக்கள்’


- கவிப்பேரரசு வைரமுத்து

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.