பிரித்தானியாவில் எல்லோரையும் திரும்பிப் பார்க்கவைத்த ஜொய்சி ஜோசப் !

 


எல்லோரையும் திரும்பிப் பார்க்கவைத்த ஜொய்சி ஜோசப் | பிரித்தானியாவில் நேற்று நடைபெற்ற உள்ளூராட்சித் தேர்தலில் கணிசமான தமிழ் வேட்பாளர்கள் வெற்றியடைந்துள்ளனர். அவர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள். 


அவற்றுள் Sutton St Helier West இல் முதல் முறையாக போட்டியிட்டு அந்த வட்டாரத்தில் அதிகூடிய வாக்குகளைப் பெற்று Lib Dem கட்சியில் நட்சத்திர உறுப்பினராக  ஜொய்சி ஜோசப் வெற்றிபெற்றுள்ளார். 


தமது வட்டாரத்தில் அதுவும் பல்சமூகம் வாழும் பிரதேசத்தில் மிகவும் அறியப்பட்ட மனித நேயம்மிக்க ஒருவராக வாழ்ந்திருப்பது பிரதான காரணமாக இருக்கலாம். ஆனாலும் அதையும் மீறிய அவரது பலம் எது?


ஒரு  உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக இவருக்குப் பின்னால் இலண்டன் வாழ் கிளிநொச்சி மக்கள், வவுனியா மக்கள், திருகோணமலை மக்கள், இவரது பிறந்த இடமான இளவாலை மக்கள் ஏன் சாவகச்சேரி மக்கள் எனக் கூட்டம் கூட்டமாக கடந்த ஒரு மாதத்துக்கு மேல் இவரது வட்டாரத்தில் பிரச்சாரத்தில் களமிறங்கியிருந்தார்கள். இதுமட்டுமல்ல நேற்றைய தேர்தல் தினத்தில் இவருக்காக சுமார் 47 தமிழ் பேசும் ஆதரவாளர்கள் தேர்தல் தினத்தன்று முழு நாளும் உடன் நின்றுள்ளார்கள். Sutton கவுன்சில் இரவிரவாக வாக்குகளை எண்ணும்போதுகூட ஒரு குழு இவருக்காக இவரது வெற்றி முடிவுக்காக விடிகாலைவரை களத்தில் காத்திருந்தது. 


அது பொய்க்கவில்லை. வாழ்த்துகள் ஜொய்சி ஜோசப்.


இது ஒரு சாதாரண விடையமல்ல. தான் வாழும் சமூகத்தை நேசிக்கும் ஒருவருக்கு, அந்த சமூகத்துடன் அவர்களின் களத்தில் நின்று அவர்களுக்காக பயணிக்கும் ஒருவருக்கு தோழமையுடன் தோள் கொடுக்கும் உறவுகளின் பலம். 


இவரது ஆதரவுத் தளம் Lib Dem கட்சியையே அதிசயிக்க வைத்ததாகத் தெரிகின்றது. இன்றைய தினத்தில் கட்சியின் உயர் மட்டத்தில் இவரது பெயர் முக்கிய பேசுபொருளாக மாறியுள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.