பிரான்சில் 95ஆம் மாவட்டத்தில் உள்ள சார்சல் பகுதியில் தமிழின அழிப்பு நினைவேந்தல்!📸


 பிரான்சில் 95ஆம் மாவட்டத்தில் உள்ள சார்சல் பகுதியில்


நெல்சன் மண்டேலா விளையாட்டுத்திடல் பகுதியில் அமைக்கப்பட்ட தமிழீழ விடுதலைப்போராட்டத்தில் முதல் மாவீரர் லெப். சங்கர் அவர்களின் நினைவுக்கல்லின் முன்பாக முள்ளிவாய்க்கால் மே 17ஆம் நாள் நினைவேந்தல் நடைபெற்றது. 


இதில் 95 மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள், மாநகர முதல்வர்கள்  மற்றும் மாநகர தமிழ் ஆலோசகர்கள் கலந்துகொண்டு தமிழீழத் தேசியக்கொடியை ஏற்றிவைத்து மலர் வணக்க உரை, தமிழர்களுக்கு ஆதரவான கருத்துக்கள் தமது உரையில் தந்திருந்ததோடு நாளை மே 18 நடைபெறவுள்ள பேரணியும் அரசியல் ரீதியான அதன் அவசியத்தையும் பேச்சில்  தெரிவித்திருந்தனர். தமிழில் சார்சல் தமிழ்ச்சங்கத் தலைவர் திரு. மத்தியாஸ் டக்லஸ் மற்றும் தமிழர் ஒருங்கிணைப்புக்குழு நிர்வாகப்பொறுப்பாளர் திரு.மேத்தா உரையாற்றினார். இன்று இந்த இடத்தில் பேசிய பாராளுமன்ற உறுப்பினர்கள் இருவரும் தமிழினப்படுகொலைபற்றி இது இன அழிப்பு என்றும் கூறியுள்ளார். இதுபோன்று பிரான்சு பாராளுமன்றத்திலும் ஒலிப்பார்கள்,ஒலிக்க வேண்டும் அதற்க்கு எம்மினத்தின் இளையவர்கள் முன்வரவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டனர்.



கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.