முட்டாள் விஜய்யால் தமிழக மக்கள் ஏமாறப்போகிறார்கள்.!
முட்டாள் விஜய்யால் தமிழக மக்கள் ஏமாறப்போகிறார்கள்.. ஓய்வு நீதிபதி மார்கண்டேய கட்ஜு கடும் ‘அட்டாக்’
தமிழகத்தின் அடுத்த முதல்வராக பதவியேற்க தவெக தலைவரும், நடிகருமான விஜய் முயன்று வருகிறார். இந்நிலையில் தான்''மூளையில் எதுவும் இல்லாத சினிமா நடிகர் விஜய் எனும் முட்டாளால் தமிழர்கள் விரைவில் ஏமாற்றடையப்போகிறார்கள்'' என்று உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி மார்கண்டேய கட்ஜு கடுமையாக அட்டாக் செய்துள்ளார்.
விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 108 தொகுதிகளில் வென்று தனிப்பெரும் கட்சியாக மாறி உள்ளது. ஆனால் ஆட்சியமைக்க தேவையான 118 எனும் மெஜாரிட்டி விஜய்க்கு இல்லை. . இதனால் பிற கட்சிகளிடம் அவர் ஆதரவு கோரி வருகிறார்.
அந்த வகையில் காங்கிரஸ் கட்சியின் 5 எம்எல்ஏக்கள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்டின் 2 எம்எல்ஏக்கள், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 2 எம்எல்ஏக்கள் என்று மொத்தம் 9 பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர். இதன்மூலம் விஜய்க்கான பலம் 116 (விஜய் 2 தொகுதியில் வென்றதால் ஒன்று குறைககப்பட்டுள்ளது) ஆக அதிகரித்துள்ளது. இன்னும் ஒரு எம்எல்ஏவின் ஆதரவு தேவையாக உள்ளது.
தவிக்கும் விஜய்
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் விஜய்க்கு ஆதரவு வழங்க வாய்ப்புள்ளதாக கூறப்பட்டு வருகிறது. ஆனால் தெரிவித்து இருந்தாலும் கூட இன்னும் தனது 2 எம்எல்ஏக்களின் தவெகவிற்கு சப்போர்ட் செய்வதாக எந்த ஆதரவு கடிதத்தையும் வழங்கவில்லை. இதனால் விஜய் நேற்று 3வது முறையாக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரை சந்தித்து ஆட்சியமைக்க கோரியும் கூட இன்னும் அதிகாரப்பூர்வமாக அழைப்பு விடுக்கப்படவில்லை.
முட்டாள் விஜய்
இந்நிலையில் தான் உச்சநீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி மார்கண்டேய கட்ஜு , விஜய் முதல்வராக பதவியேற்பதை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். இதுபற்றி அவர் தனது எக்ஸ் பக்கத்தில், ''தமிழ்நாட்டின் மாபெரும் சமூக - பொருளாதார பிரச்சனைகளை தீர்ப்பது எப்படி என்ற மூளையில் எதுவும் இல்லாத சினிமா நடிகரும் மக்களை தூண்டிவிடும் பேச்சாளருமான விஜய் அடுத்த முதல்வராக ஆகப்போகிறார். தமிழர்கள் விரைவில் இந்த முட்டாளால் ஏமாற்றமடைவார்கள். ஹரி ஓம்'' என்று கூறியிருந்தார்.
சர்ச்சை
மார்கண்டேய கட்ஜுவின் இந்த கருத்து தற்போது தவெகவினரை டென்ஷனாக்கியது. அதன்பிறகு இந்த பதிவை அவர் டெலிட் செய்தார். அதேவேளையில் இவர் இப்படி அரசியல் சார்ந்த கருத்துகளை கூறி அரசியல்வாதிகளை விமர்சனம் செய்வதும், சர்ச்சையில் சிக்குவதும் இது முதல் முறையல்ல.
ஏனென்றால் மார்கண்டேய கட்ஜு பலமுறை அதிரடியான கருத்துகளை கூறி சர்ச்சைகளில் சிக்கி உள்ளார். அந்த வரிசையில் தான் தற்போது விஜய்யை முட்டாள் என்று அவர் விமர்சனம் செய்திருப்பது சர்ச்சையை கிளப்பி உள்ளது.
யார் இந்த மார்கண்டேய கட்ஜு?
இவர் 1991ல் அலகாபாத்உயர்நீதிமன்றத்தில் நீதிபதியாக செயல்பட்டார். அதன்பிறகு 2024ல் அந்த நீதிபதியின் தலைமை நீதிபதியானார். பிறகு 2004 நம்பர் மாதம் சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமநைீதிபதியாக பொறுப்பேற்று செயல்பட்டு வந்தார். பிறகு 2005ல் டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றினார்.
பிறகு 2006ல் உச்சநீதிமன்ற நீதிபதியாகவும் பணியாற்றினார்.2011ல் ஓய்வு பெற்றார். 2011 முதல் 2014 வரை இந்திய பத்திரிக்கை மன்றத்தின் தலைவராகவும் பதவி வகித்தார். தற்போது Indian Reunification Association or IRA ('இந்திய மறு ஒருங்கிணைப்பு சங்கம்) என்பதை தொடங்கி பாகிஸ்தான் மற்றும் வங்கதேசம் என தனித்திருக்கும் பகுதிகளை மதசார்பற்ற அரசின் கீழ் கொண்டு வரும் வகையிலான அமைப்பை நிறுவி செயல்பட்டு வருகிறார்.
மேலும் தகவல்களுக்கு இணைந்திருங்கள்:
🌐 www.Tamilarul.Net
📢 மறக்காமல் Tamilarul.Net பக்கத்தைப் பின்தொடரவும்.
🌐 இணையதளம்: www.Tamilarul.Net
📢 தொடர்பு கொள்க:
Facebook page: Like 👍|Share⚡️
Share: 👥
▶️YouTube:Tamilarul News Subscribe 🔔

.jpeg
)





கருத்துகள் இல்லை