கனடாவில் வரலாறு படைத்த தமிழினப் படுகொலை நினைவகம் திறக்கப்பட்ட முதலாம் ஆண்டு நிறைவு நாள்!

 


கனடாவில் பிரம்டன் மாநகரில் சிங்குசி பூங்காவில் மே 10, 2025 மாலை நேரம் 6:00 மணியளவில்..


தமிழீழத்தின் வானளாவ நிமிர்ந்த தோற்ற நினைவகம் சிவப்பு துணி விலக்கி வீறு கொண்டு உலகிற்கு வெளிப்பட்ட காட்சி…


என்றும் மறக்க முடியாதது!


 உலகத் தமிழரை எழுச்சி கொண்டு நெகிழ வைத்த நாள்!


வலி சுமந்த மே மாதத்தின்  10 ஆம் நாளின் கனதியான நினைவுகளைச் சுமக்கின்ற நெஞ்சங்களிற்கு அன்றைய கனத்த நாளில்..


முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை உள்ளிட்ட தமிழினப் படுகொலைகளை நிரந்தர கட்டடம் மூலம் நினைவுகூறும் தூண்கள் சூழ நெடிதோங்கிய தமிழீழ உருவத்தின் நிமிர்வோடு கொண்ட முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பு நினைவுத் தூபியை உள்ளடக்கிய நினைவகம்..


தமிழரை மார் தட்டி நிமிர வைத்த நாள் அது!


அலையலையாகத் திரண்டு மைதானத்தை நிறைத்த  ஆயிரக்கணக்கான கனடியத் தமிழ் மக்களின் முன்னிலையில்..


 கனடியத் தமிழர் தேசிய அவையின் கடின உழைப்பிலும் முதன்மை முன்னெடுப்பிலும்..


 பிரம்டன் தமிழர் ஒன்றியம், பிரம்டன் தமிழ் மூத்தோர் ஒன்றியம் போன்றோரின் ஆரம்பகாலம் தொட்டு வழங்கிய பங்களிப்போடும்…


 பிரம்டன் மாநகர சபையின் அனைத்து உறுப்பினர்களினதும் ஏக மனதான தீர்மான நிறைவேற்றலுடனான அங்கீகாரத்தோடும்…


 குறிப்பாக பிரம்டன் தமிழர்களின் தோள் கொடுக்கும் தோழனான நகரபிதா பற்றிக் பிறவுனின் வலிமையான ஆதரவோடு..


சிறிலங்கா அரசு பின்னணி கொண்ட தமிழின எதிர்ப்பாளர்களிற்கு எதிரான பற்றிக்கின் வலிமையான குரல் கொடுப்போடு, 


மாபெறும் எழுச்சி நிகழ்வாக நினைவகத் திறப்பு கடந்த ஆண்டு இதே நாள் நடந்தேறியது!


கனடியத் தமிழர்களின் வாழ்நாள் வரலாற்றுக் கடனாக இந்த நினைவகம் தமிழ் மக்களின் பங்களிப்போடு நிறுவப்பட்டுள்ளமை வரலாற்றுச் சிறப்பாகும்.


 கனடா வாழ் ஈழத் தமிழரின் வரலாற்றுப் பதிவான இந் நெகிழ்ச்சியான நிகழ்வு அன்று கண்ணில் நீர் வர வைத்ததை மறக்க முடியாது!!


எங்கள் மாவீர்ர்களின் துயிலுமில்லங்கள் அழிக்கப்பட்டபோது நொருங்கிய எங்கள் இதயங்களின் ஆறாத காயங்களிற்கு மயிலிறகால் மருந்திட்டது இந்த நினைவகம்! 


சிறிலங்கா அரசினாலும் துணை நின்ற இந்தியா உள்ளிட்ட பல நாடுகளாலும் ஈழத் தமிழ் இனம் ஈழத்தில் அழிக்கப்பட்ட தமிழின அழிப்புகளை நிரந்தர தமிழர் இனவழிப்பு நினைவகம் இனி வரும் சந்ததிகளிற்கும் நிலைத்து நின்று உரத்து இயம்பப் போகின்றது!


“தமிழினவழிப்பில் கொல்லப்பட்ட அத்தனை எம் தமிழ் உறவுகளையும் மனதில் நிறுத்திக் கொண்டு..


 இன்று தமிழராய் கனடிய மண்ணில் தாய் மண்ணை மறவாத தமிழினமாக தலை நிமிர்ந்து நிற்கின்றோம்!”


 என்ற ஆறுதலை இந் நினைவகம் தருகின்றது!


 தடைகள் பல தாண்டி மக்களின் உதவியோடும் பிரம்டன் மாநகர சபை உள்ளிட்ட கனடிய மூன்று நிலை அரசுகளின் ஆதரவோடும் கட்டப்பட்ட இந்த வானளாவிய தூபிக்கு …


நிலம் தந்த மண்ணில் உறங்கிக் கொண்டிருக்கிம் கனடிய பூர்வீக குடி மக்களிற்கும் நன்றியோடு  நினைவு கூர்ந்து வணங்கி …


அனைத்து தரப்பினர்க்கும் கனடிய தமிழ் மக்கள் நாம் நன்றி கூறுகிறோம்!


இந்நினைவகம் திறந்து வைக்கப்பட்டபோது வானிலிருந்து மலர் துவிய காட்சி மெய் சிலிர்க்க வைத்தமை இன்றும் நினைவில் வருகிறது.


குண்டு மழையில் கொத்து கொத்தாகக் கொல்லப்பட்டு செத்து மடிந்த எம் உறவுகளை நினைந்து மனமுருகி அழுத நாம்..


“வீழ்ந்த இடத்தில் தமிழினம் மீண்டு எழும்!” எனும் நம்பிக்கையை ஆழ் மனதில் ஆழமாக வேர் ஊன்றியது இந்த நினைவகம்!

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.