காதலித்தவரைத் தேடி கேரளா வந்த இலங்கை இளம்பெண்!
காதலித்தவரைத் தேடி கேரளா வந்த இலங்கை இளம்பெண்… ஏமாற்றம் தெரிந்ததும் மனநிலை பாதிப்பு!
காதலனை தேடி கேரளா வந்த இலங்கைச் சேர்ந்த இளம்பெண், தாம் காதலித்தவர் ஏற்கனவே திருமணமானவர் என்றும் அவருக்கு மூன்று குழந்தைகள் இருப்பதும் தெரிய வந்ததும் மனரீதியாக கடுமையாக பாதிக்கப்பட்டார். பின்னர் அவர் திருவனந்தபுரம் மனநல மருத்துவ மையத்தில் அனுமதிக்கப்பட்டார்.
சில நாட்களுக்கு முன்புதான் கணியாபுரம் பகுதியைச் சேர்ந்த இளைஞரைத் தேடி இளம்பெண் திருவனந்தபுரத்திற்கு வந்தார். இருவரும் வளைகுடா நாட்டிலுள்ள ஒரு நிறுவனத்தில் சேர்ந்து வேலை செய்தபோது காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. சுமார் எட்டு மாதங்கள் ஒன்றாக வாழ்ந்துள்ளனர். இளம்பெண் கர்ப்பமானதற்கு பிறகு அந்த இளைஞரின் நடத்தை மாறி, அவர் தாய்நாட்டிற்கு தப்பிச் சென்றதாக இளம்பெண் கழக்கூட்டம் போலீசாரிடம் தெரிவித்தார்.
அவரை தொலைபேசியில் தொடர்புகொள்ள முடியாததால், கேரளாவிற்கே வந்துள்ளார். ஆனால், அந்த இளைஞருக்கு ஆதரவாக அவரது உறவினர்களும் நண்பர்களும் திரண்டதால், இளம்பெண் முழுமையாக தனிமைப்படுத்தப்பட்டார். தன்னை ஏமாற்றியிருப்பதை உணர்ந்ததும், அவர் மனஅழுத்தத்தில் போலீஸ் நிலைய வளாகத்திலேயே கதறி அழுதும் தரையில் புரண்டும் கொண்டிருந்தார். இதையடுத்து அவரை ஊளம்பாறை மனநல மருத்துவ மையத்திற்கு மாற்றினர்.
இவருக்கு தற்போது சட்ட உதவி செய்யவோ, சொந்த நாட்டிற்கு திருப்பி அனுப்பவோ யாரும் முன்வராத நிலை உள்ளது. அதிகாரப்பூர்வ புகார் எதுவும் அளிக்கப்படாததால் போலீசார் வழக்குப் பதிவு செய்யவில்லை. இதற்கு முன்பும் அந்த இளைஞருடன் இவர் கேரளா வந்திருந்ததாகவும், அப்போது கட்டாயப்படுத்தி கருக்கலைப்பு செய்ய வைத்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

.jpeg
)





கருத்துகள் இல்லை