வர்த்தகர்களால் பரபரப்பு!!
சுமார் 03 கோடி 13 இலட்சத்து 80 ஆயிரம் ரூபாய் பெறுமதியான வெளிநாட்டு சிகரெட் தொகையை, சட்டவிரோதமான முறையில் நாட்டிற்குள் கொண்டுவந்த 18 பேர் விமான நிலைய சுங்க அதிகாரிகள் மற்றும் சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கட்டுநாயக்க விமான நிலைய வருகை முனையத்தின், கிரீன் சேனல் வழியாக வெளியேற முயன்றபோதே அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களில் 16 சீன நாட்டவர்களும், 02 இலங்கையர்களும் அடங்குவதோடு, இவர்கள் அனைவரும் வர்த்தகர்கள் என தெரியவந்துள்ளது.
இவர்கள் துபாய் மற்றும் மலேசியாவின் கோலாலம்பூர் ஆகிய நகரங்களில் இருந்து எமிரேட்ஸ், எயார் ஏசியா, மலேசியன் ஏர்லைன்ஸ் மற்றும் பட்டிக் எயார் ஆகிய விமான சேவைகளுக்குச் சொந்தமான விமானங்கள் மூலம் சனிக்கிழமை (30) கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.
இதன்போது, அவர்கள் கொண்டு வந்த 27 பயணப் பொதிகளுக்குள் சீனாவில் தயாரிக்கப்பட்ட 209,200 சிகரெட்டுகளைக் கொண்ட 1,046 சிகரெட் கார்ட்டூன்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்தமை கண்டறியப்பட்டது.
கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகள் சந்தேகநபர்களை தடுத்து வைத்து, இது தொடர்பான மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

.jpeg
)





கருத்துகள் இல்லை