யாழ். மாவட்ட செயலத்தில் வெசாக் கொண்டாட்டம்!


யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தில் சனிக்கிழமை காலை வெசாக் பௌர்ணமி தின நிகழ்வு இடம்பெற்றது.


மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் இடம்பெற்ற இந்நிலழ்வில் பேராளராக 

ஸ்ரீ நாகவிகாரை விகாராதிபதி மீஹாஹ ஜந்துறே ஸ்ரீவிமல தேரர் கலந்து கொண்டார்.


இவர் வெசாக் தினத்தின் முக்கியத்துவம் தொடர்பாக ஆசியுரை வழங்கினார். புத்தபெருமானின் பிறப்பு, ஞானம் பெற்றல் மற்றும் பரிநிர்வாணம் ஆகியவை வெசாக் தினத்துடன் தொடர்புடையவை எனக் குறிப்பிட்ட அவர், மக்கள் தர்மத்தின் வழியில் வாழ்வதன் அவசியத்தையும் வலியுறுத்தினார்.


மேலும் இலங்கையின் அனைத்து மக்களும் ஒற்றுமை, மகிழ்ச்சி மற்றும் ஆரோக்கியத்துடன் வாழ வேண்டும் என ஆசீர்வதித்தார்.


இந்நிகழ்வில் வட மாகாண கடற்படை, விமானப் படை மற்றும் இராணுவ அதிகாரிகள், சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள், மாவட்டச் செயலகத்தின் உயர் அதிகாரிகள் மற்றும் உத்தியோகத்தர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டு ஆசீர்வாதங்களைப் பெற்றனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.