ஆட்டம் காணும் ஸ்டாலின் அணி!!

 


தமிழக அரசியலை பொறுத்தவரை காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள், விடுதலை சிறுத்தை உள்ளிட்ட சில கட்சிகள் பல வருடங்களாகவே தொடர்ந்து திமுகவுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்து வருகிறது.

இந்நிலையில் நடந்து முடிந்த 2026 சட்டமன்ற தேர்தலிலும் இந்த கட்சிகள் எல்லாம் திமுகவுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தது

ஆனால் விஜய் புதிதாக தொடங்கிய தமிழக வெற்றிக் கழகம் அனைத்து தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட்டு 108 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் இடத்திற்கு வந்துவிட்டது.

திமுகவோ தோல்வியடைந்து எதிர்கட்சியாக மாறியிருக்கிறது. குறிப்பாக அக்கட்சியின் தலைவர் முக ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் தோல்வி அடைந்துவிட்டார்

ஒருபக்கம் தவெக ஆட்சி அமைக்க இன்னும் 11 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவை என்பதால் காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தை, கம்யூனிஸ்ட் போன்ற கட்சிகளிடம் ஆதரவு கேட்டு விஜய் கடிதம் எழுதியிருக்கிறார்.

இதில் காங்கிரஸ் தங்களின் 5 எம்எல்ஏக்களின் ஆதரவை கொடுத்து விட்டது. அனேகமாக அடுத்து விடுதலைச் சிறுத்தை கட்சி தவெகவுக்கு ஆதரவளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.