பொலிசாரின் எச்சரிக்கை!!


 நாடு முழுவதும் உள்ள காவல்துறை நிலையங்களுக்கு, கையடக்கத் தொலைபேசிகள் தொலைந்து போதல் மற்றும் திருடப்படுதல் தொடர்பான முறைப்பாடுகள் நாளாந்தம் பெருமளவில் கிடைப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறான கையடக்கத் தொலைபேசிகள் அங்கீகரிக்கப்படாத நபர்களின் கைகளுக்குச் செல்வது, உரிமையாளர்களுக்குப் பாரிய ஆபத்துகளை ஏற்படுத்தும் என பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

தொலைந்து போன அல்லது திருடப்பட்ட தொலைபேசிகள் பெரும்பாலும் சமூக விரோத மற்றும் சட்டவிரோத செயல்களுக்குப் பயன்படுத்தப்படுவதாகக் குறிப்பிட்ட பொலிஸார், நிதித் தரவுகள் மற்றும் தனிப்பட்ட தகவல்கள் குற்றவாளிகளால் தவறாகப் பயன்படுத்தப்பட வாய்ப்புள்ளதாகத் தெரிவித்துள்ளது.

தொலைபேசி தொலைந்தவுடன், தொடர்புடைய சேவை வழங்குநரைத் தொடர்புகொண்டு உடனடியாக சிம் அட்டையை செயலிழக்கச் செய்யவும். இது குறித்த நபர்கள் சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவதைத் தடுக்கும்.

பொலிஸார் நிலையத்தில் முறைப்பாடு செய்யும் போது, தொலைபேசியின் IMEI எண்ணை (International Mobile Equipment Identity) கட்டாயம் வழங்க வேண்டும்.


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.