இலங்கையில் அதிகரித்த இரத்த அழுத்தம்!!

 


இலங்கையில் மூன்றில் ஒருவர் உயர் இரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளார் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

உயர் இரத்த அழுத்தம் பெரும்பாலும் வெளிப்படையான அறிகுறிகளை வெளிப்படுத்துவதில்லை என்றும், எனவே, குறிப்பாக 35 வயதுக்கு மேற்பட்டவர்கள் வழக்கமான மருத்துவப் பரிசோதனைகளை மேற்கொள்வது அவசியம் என்று சுகாதார அமைச்சின் தொற்றா நோய்கள் பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் ஸ்ரீனி அலகப்பெரும அவர் குறிப்பிட்டார்.

சாத்தியமான சுகாதார அபாயங்களை முன்கூட்டியே கண்டறியும் பொருட்டு, பொதுமக்கள் குறைந்தது ஆறு மாதங்களுக்கு ஒரு முறையோ அல்லது ஆண்டுதோறும் தங்கள் இரத்த அழுத்தத்தைப் பரிசோதித்துக்கொள்ள வேண்டும் என நாயகம் அலகப்பெரும அறிவுறுத்தினார்.

மேலும், இலங்கையில் உயர் இரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களில் 63.9 சதவீதம் பேர் சிகிச்சை பெறுவதில்லை என்றும், சிகிச்சை பெறுபவர்களில் 39.1 சதவீதம் பேர் தங்கள் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கத் தவறிவிடுகின்றனர் என்றும் அவர் தெரிவித்தார்.

அதிகப்படியான உப்பு நுகர்வு உயர் இரத்த அழுத்தத்திற்கு ஒரு முக்கியக் காரணமாக இருப்பதாக சுகாதார அமைச்சு கண்டறிந்துள்ளது.  

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.