ஒத்திவைக்கப்பட்டது சஷி வீரவன்ச வழக்கு!!

 


போலி ஆவணங்கள் மூலம் கடவுச்சீட்டு பெற்றதாக முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்ச மனைவி சஷி வீரவன்சவுக்கு எதிராக தொடரப்பட்டுள்ள வழக்கின் மேலதிக விசாரணையை ஜூலை 24 ஆம் திகதிக்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (25) ஒத்திவைத்துள்ளது.

இன்று வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, பிணையில் உள்ள சஷி வீரவன்ச நீதிமன்றத்தில் முன்னிலையாகியிருந்தார்.

வழக்குடன் தொடர்புடைய ஆவணங்கள் கணினியில் உருவாக்கப்பட்டவை அல்ல, ஸ்கேன் செய்யப்பட்டு தரவுத்தளத்தில் சேமிக்கப்பட்டவை என சி.ஐ.டி சார்பில் ஆஜரான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் தெரிவித்துள்ளார்.

மேலும், சம்பந்தப்பட்ட கணினி அமைப்பை ஆய்வு செய்ய அனுமதி வழங்கும் வகையில் சட்டத்தின் கீழ் அறிவிப்பு தாக்கல் செய்யப்படும் என்றும் நீதிமன்றத்திற்கு அறிவிக்கப்பட்டது. அதேவேளை இன்று கைதான விமல் வீரங்ச பிணையில் விடுவிக்கப்படமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.