இலங்கை ரூபாவின் பெறுமதி உயர்ச்சி!!

 


அமெரிக்க டொலருக்கு நிகராக வீழ்ச்சியடைந்து வந்த இலங்கை ரூபாய், இன்று (25) மீண்டும் வலுவடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

அதன்படி இலங்கை மத்திய வங்கி இன்று (25) வௌியிடப்பட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 326.01 ரூபாவாகவும், அதன் விற்பனை விலை 336.42 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

அதேவேளை கடந்த வெள்ளிக்கிழமை அமெரிக்க டொலரின் கொள்வனவு மற்றும் விற்பனை விலைகள் முறையே 342.63 ரூபாவாகவும் மற்றும் 354.03 ரூபாவாகவும் பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.