விசாரணையில் மகிந்த!!

 


முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அழைக்கப்பட்டுள்ளார்.

முன்னாள் அமைச்சர் பியங்கர ஜெயரத்னவுக்கும் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு இவ்வாறு அழைப்பு விடுத்துள்ளது. 

இவர்கள் இருவரும் ஏர்பஸ் ஒப்பந்தம் தொடர்பான விசாரணைக்காக  அழைக்கப்பட்டுள்ளதாகத் தெரிய வந்துள்ளது.

இதன்படி, எதிர்வரும் 12ஆம் திகதி அவர்கள் ஆணைக்குழுவில் விசாரணைக்காக முன்னிலையாக வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

2013 ஆம் ஆண்டில் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ், ஏர்பஸ் ஏ-330 மற்றும் ஏ-350 விமானங்களையும் கொள்வனவு செய்த போது, ​​அப்போதைய ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் தலைமை நிர்வாக அதிகாரி கபில சந்திரசேன மற்றும் அவரது மனைவி  ஆகியோர் 2 மில்லியன் அமெரிக்க டொலர்களை இலஞ்சமாக  பெற்றதாகக் குற்றம் சாட்டப்பட்டனர். 

கபில சந்திரசேன அவர்கள் விளக்கமறியலில் உள்ளார். இந்நிலையில் 

ஏர்பஸ் ஒப்பந்தத்தில் இலஞ்சமாகப் பெறப்பட்ட பணத்தை, சந்தேக நபரான கபில சந்திரசேன, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மற்றும் முன்னாள் விமானப் போக்குவரத்து அமைச்சர் பியங்கர ஜெயரத்ன ஆகியோருக்கு வழங்கியுள்ளார் என்பது தெரியவந்துள்ளதாக இலஞ்ச ஆணைக்குழு கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் தெரிவித்தது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.