தமிழக தேர்தல் தகவல்கள்!!

 


தமிழர் அரசியலில் மேலும் ஒரு தேர்தல் - *தமிழ்நாடு* . 234 தொகுதிகளில் நடந்த வாக்களிப்பில், திங்கள் வாக்குகள் எண்ணப்பட உள்ள நிலையில், இத்தேர்தலில் ஆண்களை விட *பெண்* *வாக்காளர்கள்* *அதிகம்* மட்டுமல்ல (2.8 கோடி ஆண்கள் - 2.93 கோடி பெண்கள்), அதிகம் வாக்களித்தும் உள்ளனர்.


இந்நிலையில் 4023 மொத்த வேட்பாளர்களில், 442 ( *11%* ) *பெண்* *வேட்பாளர்கள்* போட்டியிட்டுள்ளனர். இதில் கட்சிகள் எவ்வாறு பெண்களுக்கு முன்னுரிமை வழங்கியுள்ளனர் என்று பார்த்தால்,


நாம் தமிழர் - *117* /234  (50%) - 116 பெண்கள்+ 1 திருநங்கை 

அ.தி.மு.க கூட்டணி - *29* /234 (12.4%)

தி.மு.க கூட்டணி - *26* /234 (11.1%)

தமிழக வெற்றிக் கழகம் (தன்.வெ.க) - *24* /234 (10.3%)


ஆண்கள் அதிகம் போட்டியிட்ட கட்சிகள் -

த.வெ.க - *209* /233 (89.7%)

தி.மு.க கூட்டணி - *208* /234 (88.9%)

அ.தி.மு.க கூட்டணி - *205* /234 (87.6%}

நாம் தமிழர் - *117* /234 (50%)


சரி, தமது வேட்பாளர்களில் எவ்வாறு தகுதியானவர்களை ( *கல்வித்* *தகமை* ) கட்சிகள் நியமித்துள்ளன எனப் பார்த்தால், *முனைவர்* *பட்டம்* பெற்றவர்கள் (PhD)

நாம் தமிழர் - *14*  /234

தி.மு.க - *6*  /176

த.வெ.க - *6*  /233

பா.ஜ.க - *3*   /33


கட்சிகளில் போட்டியிட்டவர்களில், குறைந்த பட்சம் *இளங்கலை* (Bachelor's degree) பட்டமாவது பெற்றவர்கள், 

நாம் தமிழர் - *187* /234 (14 முனைவர், 60 முதுமாணி, 113 இளங்கலை)

தி.மு.க கூட்டணி - *148*  /234 (8 முனைவர், 38 முதுமாணி, 102 இளங்கலை)

த.வெ.க - *120* . /233 (6 முனைவர், 43 முதுமாணி, 71 இளங்கலை)

அ.தி.மு.க - *84*   /172. (84 இளங்கலை)


சரி, கட்சிகளின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் சராசரி வயது என்ன?.

இளையவர்களின் கட்சி என்கிறார்கள் அனைவரும், அது உண்மையா? வாருங்கள் பார்ப்போம்!

அ.தி.மு.க கூட்டணி சராசரி வயது - *57* 

தி.மு.க கூட்டணி சராசரி வயது - *56* 

த.வே.க சராசரி வயது - *45* 

நாம் தமிழர் - *38* 


தமிழ் சமூகமாக எங்கள் அரசியல் எங்கிருக்கிறது? என்ற உங்கள் சிந்தனைக்கு இத்தகவல்கள் உதவலாம்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.