வெசாக் விடுமுறை தொடர்பான அறிவிப்பு!!

 


இந்த ஆண்டின் வெசாக் பௌர்ணமி தினம் மே மாதம் 30ஆம் திகதி தீர்மானிக்கப்பட்டுள்ளமை தொடர்பில் பௌத்த விவகார திணைக்களம் தெளிவுபடுத்தியுள்ளது.

 வெசாக் பௌர்ணமி தினம் தொடர்பில் சமூக மட்டத்தில் மாறுபட்ட கருத்துக்கள் நிலவிவரும் பின்னணியிலேயே இந்த விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, மே மாதம் 30ஆம் திகதியை வெசாக் பௌர்ணமி தினமாக கருத வேண்டும் என்றும், மே 27ஆம் திகதி முதல் ஜூன் 02ஆம் திகதி வரையிலான காலப்பகுதியை வெசாக் வாரமாக அறிவிக்க வேண்டும் என்றும் முன்மொழியப்பட்டுள்ளது.

அடுத்த நாளான மே மாதம் 31ஆம் திகதியை அரச விடுமுறை தினமாக பிரகடனப்படுத்தி பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலையும் அண்மையில் வெளியிட்டிருந்தது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.