புதிய அரசியலமைப்பு உருவாகும்!!

 


புதிய அரசியலமைப்பு நிச்சயம் உருவாக்கப்படும். ஆனால் அதற்கான காலவரைபு பற்றி இதுவரை எவ்வித பேச்சுவார்த்தையும் இடம்பெறவில்லை.

வடக்கு, கிழக்கு மற்றும் மலையக மக்களுக்கு அரசியலமைப்பு சார்ந்த உரிமைகளை பெற்றுக்கொடுப்போம் என நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சர் ஹர்ஷன தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது, 30 வருடகால யுத்தம் முடிவடைந்தாலும் அதனால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு இன்றளவில் தீர்வு கிடைக்கவில்லை.

இதனால் தான் வடக்கு மற்றும் கிழக்கு மக்கள் இன்றும் போராட்டங்களில் ஈடுபடுகிறார்கள். நாட்டின் தேசிய பாதுகாப்பை கருத்திற் கொண்டு வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் காணிகள் விடுவிக்கப்படும்.

ஜனாதிபதி அநுரகுமார ஆட்சிக்கு வந்து ஒன்றரை வருட காலத்தில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பல ஏக்கர் காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளன. இராணுவ முகாம்கள் அகற்றப்பட்டுள்ளன. வீதிகள் திறக்கப்பட்டுள்ளன. பொதுமக்களின் காணிகளை பொதுமக்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் உறுதியாகவுள்ளோம்.

நாட்டுக்கு பொருத்தமான வகையில் புதிய அரசியலமைப்பு ஒன்றை உருவாக்குவோம் என்று மக்களுக்கு வாக்குறுதியளித்தோம். புதிய அரசியலமைப்பு உருவாக்கம் என்பது விரிவானதொரு செயற்பாடாகும்.

புதிய யாப்புருவாக்கத்துக்குரிய கால வரைபு பற்றி அமைச்சரவையில் எவ்வித தீர்மானமும் இதுவரையில் எடுக்கவில்லை என்றார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.