வவுனியாவில் திடீரென தீப்பற்றி எரிந்த மோட்டர் சைக்கிள்!📸


வவுனியா, ஏ9 வீதியில் சென்று கொண்டிருந்த போது மோட்டர் சைக்கிள் ஒன்று திடீரென தீப்பற்றி எரிந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.


வவுனியா நகரப் பகுதியில் இருந்து ஏ9 வீதி ஊடாக சென்ற மோட்டர் சைக்கிள் தாண்டிக்குளம், முருகன் கோவிலடியை அண்மித்த போது திடீரென தீப்பற்றி எரிந்துள்ளது. இதனையடுத்து அதில் பயணித்த இரு இளைஞர்களும் மோட்டர் சைக்கிளை கீழே போட்டுவிட்டு நிலத்தில் வீழ்ந்து தப்பியுள்ளனர்.


இதன்போது, அப்பகுதியில் நின்ற இளைஞர்கள், பொது மக்கள் நீரி மற்றும் மண் என்பவற்றை போட்டு தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்திருந்தனர்.




#Vavuniya #vavuniyatown

#tamilmedia #BreakingNews #kovil #TamilNews #tamilshorts #new #www #LatestNews #website #socialmedia 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.