விஜய் உடனான இலங்கை உறவு!!
தமிழ்நாட்டில் விஜய்யின் அரசாங்கத்துடன் உறவுகளை வைத்துக்கொள்வதால் இலங்கையின் எதிர்கால அபிவிருத்தியில் ஒரு பங்கை பெற்றுக்கொள்ள முடியுமாக இருக்கும் என்று நம்புகிறேன் என எதிர்க்கட்சி உறுப்பினர் வே.இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
இதற்கு உறுதுணையாகவுள்ள செங்கோட்டையன் தொடர்பிலும் கூற வேண்டும். செங்கோட்டையன் 2018ஆம் ஆண்டில் இலங்கை வந்திருந்த போது யாழ்ப்பாணம், மட்டக்களப்பு நூலகங்களுக்கு புத்ததகங்களை வழங்கியிருந்தார். கண்டியில் நடைபெற்ற எம்.ஜீ.ஆர் நூற்றாண்டு விழாவிலும் கலந்துகொண்டிருந்தார் என்பதையும் குறிப்பிட்டார் .
நாடாளுமன்றத்தில் நேற்று (7) இடம்பெற்ற அவசரகால சட்டத்தை நீடிக்கும் வர்த்தமானி மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில், தமிழ்நாட்டில் விஜய் முதலமைச்சராக பதவியேற்கவுள்ளார். இதற்கு எமது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.
இதற்கு உறுதுணையாகவுள்ள செங்கோட்டையன் தொடர்பிலும் கூற வேண்டும்.
செங்கோட்டையன் 2018ஆம் ஆண்டில் இலங்கை வந்திருந்த போது யாழ்ப்பாணம், மட்டக்களப்பு நூலகங்களுக்கு புத்த்தகங்களை வழங்கியிருந்தார். கண்டியில் நடைபெற்ற எம்.ஜீ.ஆர் நூற்றாண்டு விழாவிலும் கலந்துகொண்டிருந்தார்.
விஜய்யின் ஆட்சி தமிழ்நாட்டில் நடக்கும் போது நாங்கள் தொடர்ந்தும் இவர்களுடன் உறவுகளை வைத்துக்கொண்டு, இலங்கையின் எதிர்கால அபிவிருத்தியில் ஒரு பங்கை பெற்றுக்கொள்வதற்கான வசதி இருக்கும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கின்றது இதனால் விஜய்க்கும் செங்கோட்டையனுக்கும் எமது நன்றியை கூறிக்கொள்கின்றோம்.

.jpeg
)





கருத்துகள் இல்லை