வெற்றி வாகை சூடிய விஜய்!!விஜய்!!

 


இந்தியா -  தமிழ்நாட்டின் சட்டசபைத் தேர்தலில் மூன்றாவது சுற்று வாக்கு எண்ணிக்கை தற்போது முடிவடைந்த நிலையில் 107 தொகுதிகளில் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலையில் உள்ளது.

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக கூட்டணிக் கட்சிகள் 78 தொகுதிகளில் முன்னிலையில் உள்ள நிலையில், ஆளும் திராவிட முன்னேற்றக் கழக கூட்டணியானது 51 தொகுதிகளிலேயே முன்னிலை பெற்று பின்தங்கியுள்ளதுடன், புதிய நீதிக் கட்சி ஒரு தொகுதியில் முன்னிலையில் உள்ளது.

தமிழக சட்டமன்ற தேர்தல் 2026-க்கான வாக்கு எண்ணிக்கையில்,ஒட்டுமொத்த மாநிலத்தையும் அதிரவைக்கும் முடிவுகள் வெளியாகியுள்ளன. தமிழக அரசியலில் பல தசாப்தங்களாக நீடித்து வந்த இருமுனை போட்டியை உடைத்து, நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் தற்போது 107 இடங்களில் முன்னிலை பெற்று முதலிடத்தைப் பிடித்துள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.