சனநாயகன்! ~
கோட், சூட் அணிந்த ஓர் எக்ஸிகியூட்டிவ் தோற்றத்தில் தமிழக முதல்வர். உற்சாகமாக இருக்கிறது. கடந்த சில நாட்களாக அலைக்கழிக்கப்பட்டார். அதன் சாயல் முகத்தில்லை. பதவிப் பிரமாணத்தைக்கூட , ஒரு நடிகருக்கான உடல்மொழியோடு மொழிகிறார்.
முதலமைச்சர் காலில் அமைச்சர்கள் விழும் வழக்கமான காலாச்சாரம் இல்லை. தம் தலைவரை hug செய்கிறார்கள். தன்னோடு அரசியல் சமரில் கூட இருந்த சகாக்கள் பதவி ஏற்பதை கண்கள் மின்ன பெருமையோடு பார்க்கிறார் விஜய்.
எதிர்பார்த்ததுபோல் நலத்திட்டங்கள் எதிலும் முதல்வர் விஜய் ஒப்பமிடவில்லை. போதை ஒழிப்பு, மகளிர் பாதுகாப்பு போனற செலவு வைக்காதத் திட்டங்களில் ஒப்பமிடுகிறார்.
பிறகு பேச வருகிறார்.
வழக்கமான திராவிட மாடல் தேய்வழகுகள் இல்லாத உரை.
ஒரு கம்பெனி சிஇஒ போல பேசுகிறார். புதிய அரசு பெரும் கடன் சுமையோடு தொடங்குகிறது! என யதார்த்தம் உரைக்கிறார். தனக்கு கொஞ்சம் கால அவகாம் வேண்டும் என மக்களிடம் கேட்கிறார்.
தான் ஒருவன் மட்டுமே இந்த ஆட்சியின் பவர் சென்ட்டர் என்கிறார்.
தவறு செய்யம் எண்ணம் உள்ளவர்கள் அதை அழித்துவிட வேண்டுமெனவும் கூறுகிறார். அரசின் தற்போதை நிலை குறித்து விரிவாக வெள்ளை அறிக்கை வழங்குவோம் என்கிறார்.
வாக்குப்பதிவு ஒரு இண்டெர்வெல் பிளாக்போல் இருந்தது கடந்த நான்கு நாட்களாக கிளைமேக்ஸ் . இன்று சுபம். தமிழக அரசியல் ஒரு திரைப்படக் காட்சி போல நகர்ந்து முடிவுக்கு வந்திருக்கிறது. கடந்த நான்கு நாட்களில் உண்மையான அரசியலை விஜய் மற்றும் தவெகவினர் கற்றிருப்பார்கள்.
ரசிகர்களை ராட்சச வலைப்பின்னலாக ஒருங்கிணைப்பது. கவர்ச்சிகரமான தேர்தல் வாக்குறுதிகளை அளிப்பது. ஆழமான உணர்ச்சிகளை வடிவமைத்து வாக்குச் சாவடிக்கு கொண்டு வருவது . இவற்றில் வெற்றி பெற்றிருக்கிறார் விஜய்.
ஆனாலும் இன்னும் அவர் நீண்டதூரம் அரசியலில் பயணிக்க வேண்டும்.
ரசிகராக இருக்க விசுவாசம் போதும். கட்சித் தொண்டராக மாற அரசியல் கொள்கைகள் வேண்டும்.
அரசியல் கட்டமைப்பு, நிர்வாகம், உள்ளாட்சி , தீண்டாமை ஒழிப்பு, நலத்திட்டங்கள், சமூக நீதி, சுயாட்சி, மாநிலத்தின் அரசியல் வரலாறு, என தவெகவினருக்கு விரிவான அரசியல் பயிற்சி தேவை.
முக்கியமாக விஜய் மற்றும் தவெகவினர் தன் திரை இருப்பை மறுத்து, அதிலிருந்தை வெளெயேற வேண்டும். அவர்கள் முழுமையாக அரசியல்மயப்பட வேண்டும்.
உணர்ச்சிபூர்வமான பரிவர்த்தனை என்பதைத் தாண்டி , அரசியலை சித்தாந்தக் களமாக அவர்கள்
மாற்ற வேண்டும்.
விஜயகாந்த், கமல்ஹாசன், ரஜினிகாந்துக்கு கொடுக்காத வெற்றியை மக்கள் விஜய்க்கு அளித்திருக்கிறார்கள். இது அதிர்ஷ்டத்தால் விளைந்ததல்ல.
மக்கள் நம்பிக்கையால், நல்லெண்ணத்தால், உருவான வெற்றி.
இப்போது விஜய் சூப்பர் ஸ்டார் இல்லை. தமிழகத்தின் முதல்வர். வெள்ளம் என்றாலும் வெய்யில் என்றாலும் அவர் மக்களோடு வீதியில் நடக்க வேண்டும்.
சினிமா ஹீரோவாக இல்லாமல் தன்னை நம்பிய மக்களின்
நிச நாயகனாக விஜய் மாறவேண்டும்.
மாற்றம் நிகழுமா?
பொறுத்திருந்து பார்ப்போம்.
முதல்வர் விஜய்க்கு வாழ்த்துகள்!
கரிகாலன்

.jpeg
)





கருத்துகள் இல்லை