நீண்ட கால நடைமுறையை மாற்றிய தமிழக முதலமைச்சர்!!

 


தமிழக அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டு இன்று புதிதாக 23 எம்.எல்.ஏக்கள் பதவியேற்றுக்கொண்டனர். இதில் 60 வருடங்களுக்குப் பின் காங்கிரசை சேர்ந்த ஒரு எம்.எல்.ஏ அமைச்சராக பதவி ஏற்றிருக்கிறார்.

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் தவெக ஆட்சியைப் பிடித்திருக்கிறது. அதிமுக, திமுக போன்ற பல வருட அனுபவமுள்ள அரசியல் கட்சிகளை பின்னுக்கு தள்ளி நடிகர் விஜய் துவங்கிய தமிழக வெற்றிக் கழகத்திற்கு மக்கள் பேராதரவு கொடுத்த நிலையில் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று விஜய் தற்போது முதலமைச்சராக மாறியிருக்கிறார்.

தமிழக அரசியல் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு நான்கு பெண் எம்.எல்.ஏக்கள் அமைச்சர்களாக பதவிவேற்றுக் கொண்டனர்.

2011ம் வருடம் அப்போதையை முதல்வர் ஜெயலலிதாவின் ஆட்சியில் 3 பெண் அமைச்சர்கள் இடம் பெற்றதே அதிகமாக இருந்தது.

அதேபோல் முதல் முறையாக 7 பட்டியலின எம்.எல்.ஏக்கள் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளனர்.

அதேபோல் 60 வருடங்களுக்குப் பின் காங்கிரசை சேர்ந்த ஒரு எம்.எல்.ஏ அமைச்சராக பதவி ஏற்றிருக்கிறார். அதேபோல் 60 வருடங்களுக்குப் பின் தமிழகத்தில் கூட்டணி ஆட்சியும் மலர்ந்திருக்கிறது.

ராஜாஜி மட்டுமே இதை கடைசியாக செய்திருந்தார். இப்படி ஒரு அரசியல் பாய்ச்சலையை தவெக தலைவர் மற்றும் தமிழக முதலமைச்சர் விஜய் நிகழ்த்தி காட்டியிருப்பதாக அரசியல் விமர்சகர்கள் பாராட்டி வருகிறார்கள்.. 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.