இங்கிலாந்தில் மட்டுமே Reform Uk மிக பெரிய ஆதிக்கம் !
இங்கிலாந்தில் உள்ள கட்சிகளில் Reform Uk மிக பெரிய ஆதிக்கமும் அதிக படியான மக்கள் வாக்குரிமையும் செலுத்தியுள்ளது .
ஆனால் ஸ்கொட்லாந்து மற்றும் வேல்ஸ் ஆகிய இடங்களில் அவர்காளால் குறிப்பிடத்தக்க ஆதிக்கத்தை செலுத்த முடியல .
காரணம் அங்கு மக்கள் தங்கள் தங்கள் தேசியத்தை முன்னிலைப்படுத்தி இயங்கும் கட்சிகளை ஆதரித்து வாக்களித்துள்ளனர் . இருப்பினும் பெரும்பான்மை பலத்தை பெற விடாமல் தடுத்துள்ளது Reform Uk .
96 உறுப்பினர்களை கொண்டுள்ள வேல்ஸ் பாராளுமன்றத்தில் 43 உறுப்பினர்களை வென்றுள்ளது வேல்ஸ் தேசிய கட்சியான Plaid Cymru கட்சி . இருப்பினும் தனித்து ஆட்சி அமைக்க முடியாது .பெரும்பாலும் லேபர் கட்சியுடன் சேர்ந்து ஆட்சி அமைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது . Reform uk பெற்றுக்கொண்ட 34 உறுப்பினர்களாலேயே Plaid Cymru கட்சி பெரும்பான்மை பெறமுடியவில்லை .&
கடந்த தடவை ஆட்சியிலிருந்த லேபர் 35 உறுப்பினர்களை இழந்து வெறும் 9 உறுப்பினர்களை மட்டுமே பெற்றுள்ளது .
129 உறுப்பினர்களை கொண்டுள்ள ஸ்கொட்லாண்ட் தேசத்தில் மக்கள் ஸ்கொட்லண்ட் க்கு நாடு வேண்டும் என்கிற கோரிக்கையை நோக்கமா கொண்டு இயங்கும் தேசிய கட்சியான் Scottish National Party க்கு கூடுதலாக வாக்களித்துள்ளனர் .ஆனாலும் பெரும்பான்மை பெறவேண்டிய 65 உறுப்பினர்களை பெற முடியவில்லை .58 உறுப்பினர்களையே பெற்றுள்ளது .அங்கும் அவர்கள் லேபர் கட்சியுடன் சேர்ந்தே ஆட்சி அமைப்பார்கள் . Reform uk யானது பெற்று கொண்ட 17 உறுப்பினர்களால் தான் Scottish National Party யால் பெரும்பான்மையை பெறமுடியவில்லை .


.jpeg
)





கருத்துகள் இல்லை