மாநகர சபை உறுப்பினர் கபிலன் சுந்தரமூர்த்தியின் தாயாரின் இறுதிக்கிரியைகள் நிறைவு!📸


தேசிய மக்கள் சக்தியின் யாழ்ப்பாணம் மாநகர சபை உறுப்பினரும், யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைப்பாளரும், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் விரிவுரையாளருமான கலாநிதி கபிலன் சுந்தரமூர்த்தி அவர்களின் தாயார் திருமதி சுந்தரமூர்த்தி நிர்மலாதேவி அவர்கள் நேற்று காலமான நிலையில், அவருடைய பூதவுடல் இன்று உறவினர்கள், நண்பர்கள், அரசியல் மற்றும் சமூகப் பிரமுகர்கள் ஆகியோரின் இறுதி அஞ்சலிக்குப் பின்னர் தகனம் செய்யப்பட்டது.


அன்னாரின் இறுதிக்கிரியைகளில் பெருமளவான பொதுமக்கள் கலந்து கொண்டு தமது அஞ்சலியைச் செலுத்தினர். தாயாரின் மறைவு கபிலன் சுந்தரமூர்த்தி அவர்களின் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் பேரிழப்பாக அமைந்துள்ளது.


அன்னாரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திப்பதோடு, துயரத்தில் வாடும் குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.