கிளிநொச்சியில் பேருந்து தரிப்பிடத்தில் நபர் ஒருவர் உயிரிழந்த நிலையில் மீட்பு
கிளிநொச்சி ஏ9 பிரதான வீதியில், இலங்கை தொலைத்தொடர்பு நிலையம் (ரெலிகொம்) அருகில் அமைந்துள்ள தொண்டமான் நகர் செல்லும் வீதிக்கு முன்பாக உள்ள பேருந்து தரிப்பிடத்தில் நபர் ஒருவர் உயிரிழந்த நிலையில் இன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.
குறித்த நபர் பேருந்து தரிப்பிடத்தில் உறங்கிய நிலையில் காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்ற நிலையில், பின்னர் அவர் உயிரிழந்துள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
உயிரிழந்த நபரின் அடையாளம் இதுவரை கண்டறியப்படாத நிலையில், அவரை இனங்காணுவதற்கான நடவடிக்கைகளை கிளிநொச்சி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
எனவே, குறித்த நபர் தொடர்பில் தகவல்கள் அறிந்தவர்கள் அருகிலுள்ள பொலிஸ் நிலையத்தையோ அல்லது கிளிநொச்சி பொலிஸாரையோ தொடர்புகொண்டு தகவல்களை வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

.jpeg
)





கருத்துகள் இல்லை