அதிமுகவில் இருந்து 1,170 நிர்வாகிகள் விலகல் என தகவல்!


எடப்பாடி பழனிசாமி நியமனம் செய்ததாக குறிப்பிடப்படும் புதுக்கோட்டை தெற்கு மாவட்டச் செயலாளர் ராமு மீது ஏற்பட்ட அதிருப்தி காரணமாக, திருமயம் தொகுதியில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் வைரமுத்து உள்ளிட்ட சுமார் 1,170 நிர்வாகிகள் அதிமுகவில் இருந்து விலகியதாக தகவல் வெளியாகியுள்ளது.


கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. மாவட்ட நிர்வாக அமைப்பு, பொறுப்பாளர் நியமனம் மற்றும் கட்சி செயல்பாடு தொடர்பான கருத்து வேறுபாடுகள் இதற்குக் காரணமாக சொல்லப்படுகிறது.


இதுகுறித்து சம்பந்தப்பட்ட தரப்புகளின் அதிகாரப்பூர்வ விளக்கம் மற்றும் கட்சியின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.



கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.