சங்கீத் வருமானத்துக்காக தலைவர், புலி, தேசியம் என புலம்பீட்டான் போல!


தம்பிக்கு இனி வெளிநாட்டு கிடையாது ஒருவேளை மாகாண சபைக்கு பிரச்சாரப் பீரங்கி தான்.


தம்பி வருமானத்துக்காக தலைவர், புலி, தேசியம் என புலம்பீட்டான் போல இப்ப தான் சிங்கத் தேசியம் தான் சரி என விளங்கீற்றுது போல.


தவறாக சொல்ல வில்லை தனது விடுதலைக்காக பாடுபட்ட அனைவருக்கும் நன்றி என கூறியிருந்தால் பரவாயில்லை.


உண்மையை கூறப்போனால் பயங்கரவாத தடைச் சட்டத்தில் அதுவும் தமிழ் பொதுமகன் ஒருவர் கைது செய்யப்பட்டால் சட்டத்துறையால் மட்டும் அவரை மீட்டு விட முடியாது என்பது எனக்கு தெரிந்த அறிவு.


நிர்வாகத்துறையின் அதீத தலையீடு இருந்தால் மட்டுமே அவரை விடுவிக்க முடியும் அந்த விடயத்தில் நிர்வாகத்துறைக்கு அழுத்தம் கொடுத்தது தமிழ் தரப்பு அதை தம்பி மறந்து விட்டான் போல. 


தேசியமக்கள்சக்தி பாராளுமன்ற உறுப்பினர்கள் சங்கீத் கைது செய்யப்பட்டு போராட்டங்கள் இடம்பெற்ற காலப் பகுதிகளில் விடுதலை தொடர்பில் வாய் திறக்காமல் மௌனமாக இருந்தார்கள். 


ஒன்றை மட்டும் கூறினார்கள் சங்கீத்தின் கைது தமிழ அரசியல்வாதிகளுக்கு அரசியல் தமக்கு கவலை என்றார்கள். 


அது ஒன்றுதான் அவர்கள் கூறிய ஆறுதல். 


இந்த விடயங்களை பார்க்கும்போது முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா புலி #எதிர்ப்பு வாதியாக இருந்தாலும் #பயங்கரவாத தடைச் சட்டத்தில் கைது செய்யப்படும் போது பாதிக்கப்பட்டவர்கள் அவரிடம் தேடிச் செல்வது வழமை. 


யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தர்ஷானந் மற்றும் கொடிகாமத்தில் புலிச் சீருடை விவகாரத்தில் கைது செய்யப்பட்டவர்களின் விடுதலையை காதும் காதும் வைத்தது போன்று செய்து முடித்தவர் டக்ளஸ்.அது அவருடைய ஆளுமை.


அக்கால பகுதியில் சட்டத்துறையை காட்டிலும் நிர்வாகத்துறையை நம்பியதால் அந்த விடயத்தை தனது ஆளுமையை பயன்படுத்தி செய்து முடித்தார். 


அதேபோன்று நல்லாட்சி அரசாங்கத்தில் ஆனந்தசுதாகரன் விடுதலைக்காக முன்னாள் அமைச்சர் அங்கஜன் இராமநாதன் சட்டத்துறையை தாண்டி நிர்வாக துறையினால் நகர்வுகளை மேற்கொண்டார் இறுதி நேரத்தில் சில காரணங்களால் அது தடைப்பட்டு விட்டது. 


அதேபோன்று நல்லாட்சி அரசாங்கத்தில் சட்டமா அதிபராக இருந்த டபிள்யூ டிலிவரா காலத்தில் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.எ .சுமந்திரன் யாழ் பல கழக மாணவர்களின் விடுதலைக்காக முன் நின்று செயல்பட்டார்.


அதேபோன்று ரணில் விக்கிரமசிங்க ஆட்சியில் முன்னாள் நீதி அமைச்சர் விஜயதாசராஜபக்ச சட்டமா அதிபர் சஞ்சைராஜரட்ணம் முன்னாள் முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் ஆகியோர் இணைந்து அரசியல் கைதிகள் பலர் விடுவிப்புக்கு காரணமாக இருந்தார்கள். 


இந்த கலந்துரையாடலில் நானும் பங்கு எடுத்தவன் என்ற வகையில் இதில் இடம் பெற்ற சம்பவங்கள் அனைத்தும் எனக்கு நன்கு தெரியும். 


முன்னாள் அமைச்சர் விஜயதாச ராஜபக்சே யாழில் தமிழ அரசியல் கைதிகளின் உறவினர்களை சந்தித்த போது ஒரு விடயத்தை கூறினார் பொது மன்னிப்பு என்பது

 சாத்தியமற்ற விடயம் நான் வழக்குகளை துரிதப்படுத்துவதற்கு சட்டம் அதிபருடன் இணைந்து இவர்களை விடுவிப்பதற்கு உதவுவேன் என்றார். 


அதன் பிரகாரம் சட்டமா அதிபர் நீதி அமைச்சர் முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரன் ஐயா ஆகியோரின் உரையாடல்களின் பின்னர் இந்த விடயம் சாத்தியமானது. 


விஜயதாச ராஜபக்ஷ நீதி அமைச்சராக இருந்த காலத்தில் மட்டும் பல அரசியல் கைதிகள் வழக்குகள் துரிதப்படுத்தப்பட்டு விடுவிக்கப்பட்டார்கள்.


அந்த காலகட்டத்தில் தற்போது வரை 30 வருடங்களுக்கு மேலாக சிறையில் வாழும் பார்த்திபனை விடுவிப்பதற்கான நகர்வுகள் அக்காலத்தில் மேற்கொள்ளப்பட்டபோதும் அவரின் மேல்முறையீடு இருந்த காரணத்தினால் அந்த விடுதலை சாத்தியமாகவில்லை. 


ஏன் இதை நான் கூறுகிறேன் என்றால் பயங்கரவாத தடைச் சட்டத்தை பொருத்தவரையில் நிர்வாக துறையின் அதீத தலையீடு இல்லை எனறால்

ஒரு தமிழ் மகனால் பிணையில் வர முடியாது. 


தம்பி சங்கீத் இதற்கு விதிவிலக்கல்ல! 


ஆனால் தனக்காக போராடிய பலரை மறந்து ஒரு சிலரை மட்டும் தன் விடுதலைக்காக போராடியவர்கள் போல் கூறுவது ஏற்க முடியாது.


நீதிமன்றத்து வெளியில் ஜனாதிபதி மற்றும் இளங்குமரனுக்கு நன்றி என்றான்.


வீட்டில் போய் ஆராய்ந்து social media வின் பேடுறன் என்றான் .


சங்கீத் விவகாரத்தை பொருத்தவரையில் ஜனாதிபதி சட்டத்தரணி எம் ஏ சுமந்திரன் முதன் முதலில் நீதிமன்றத்தை நாடினார்.


அதன் பின்னர் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் மற்றும் ஏனைய சட்டத்தரணிகள் அவருக்காக குரல் கொடுத்தார்கள்.


சமீப காலத்தில் பயங்கரவாத தடைச் சட்டத்தில் கைது செய்யப்பட்ட யாழ்ப்பாண இளைஞனுக்காக வெளிநாட்டு தூதரகங்களுக்கு முன்னால் குரல் எழுப்பப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.


வீடு போய் ஆராய்ந்து சொல்லுறேன் என்றவன் வீட்டில்.


யாரோ ஒருவன் ஒலிவாங்கியை கொண்டு வீடு செல்கிறான் அவன் போட்ட பாதி வீடியோவில் ஜனாதிபதியை வெட்டிவிட்டு 

இளங்குமரன் sir இல்லை என்றால் நான் வெளியில் வந்திருக்க மாட்டேன் என்கிறான்


தம்பியின் வயதுக்கு தலைவர் ,புலி தேசியம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை .


எங்கட தமிழ் அரசியல் வாதிகளுக்கு இருக்கா என கேட்க வேண்டாம் .


தேர்தல் காலங்களில் அரசியல் வாதிகள் அடிச்சு விடுகிறமாதிரி தம்பியும் வெளிநாட்டி இசைக் கச்சேரிக்கு #கூப்பிடுவாங்க என விடுதலை வீரன் மாதிரி ஏதோ புலம்பி பாடி விட்டான்.


தம்பிக்கு இனி வெளிநாட்டு கச்சேரி கிடையாது அடுத்த மாகாண சபைக்கு பிரச்சாரப் பீரங்கி தான்!!

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.