உயர்ந்த விருது பெற்ற தமிழர்!!

 


சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் மனித உரிமைகள் துறைகளில் பல தசாப்தங்களாக ஆற்றி வரும் மிகச்சிறந்த பங்களிப்பிற்காக, தமிழ் பேராசிரியரான டெரன்ஸ் ஜெயரத்தினத்திற்கு ஆஸ்திரேலியாவின் உயரிய விருதுகளில் ஒன்றான Member of the Order of Australia வழங்கிக் கௌரவிக்கப்பட்டுள்ளது. 


Net Zero அமைப்பின் நிறுவனரான இவர், உலகப் புகழ்பெற்ற அம்னெஸ்டி இன்டர்நேஷனல் (Amnesty International) மற்று ACF போன்ற மனித உரிமை மற்றும் சுற்றுச்சூழல் அமைப்புகளின் வாரிய உறுப்பினராகவும் பணியாற்றியுள்ளார்.


ஒரு அகதியாக அவுஸ்திரேலியாவிற்கு வருகை தந்து, ஒட்டுமொத்த பூமியினதும் மனிதர்களினதும் நலனைத் தனது வாழ்நாள் பணியின் மையமாகக் கொண்டு, அர்ப்பணிப்புடன் வாழ்ந்து காட்டியுள்ள பேராசிரியர் டெரன்ஸ் பலருக்கும் ஒரு சிறந்த முன்மாதிரியாகத் திகழ்கிறார். '


பிரிட்ஜிங் லங்கா அமைப்பின் மூலம் லாரா மற்றும் டெரன்ஸ் தம்பதியினர் மேற்கொண்டு வரும் சமூகப் பணிகள் பலரையும் ஊக்குவிக்கும் வகையில் அமைந்துள்ளன. 

தாராள மனப்பான்மை மற்றும் சிறந்த ஆளுமையின் மூலம் அவர் உருவாக்கியுள்ள சமூகத்தினருடன் இணைந்து, இன்று மதியம் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க சாதனையை மக்கள் பெரும் நெகிழ்ச்சியோடு கொண்டாடி மகிழ்ந்தனர். உலகெங்கிலும் உள்ள பலரும் அவருக்குத் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.



கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.