பிள்ளையானுக்கு மீண்டும் விளக்கமறியல் !


கிழக்கு மாகாணத்தின் பல பகுதிகளில் ஐந்து பேர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகநபராக பெயரிடப்பட்டுள்ள பிள்ளையான் என்ற முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.


அவரை இன்றைய (30) தினம் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போது எதிர்வரும் 13 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.


இவர் கிழக்கு பல்கலைக்கழக முன்னாள் உபவேந்தர் கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புபட்ட குற்றச்சாட்டில் ஏற்கனவே #கைது செய்யப்பட்டு, தற்போது வெலிக்கடை சிறைச்சாலையில் விளக்கமறியல் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


#BreakingNews #SriLanka #LKA #Trending #Viral #Update #PublicNews #SriLankaNews #LocalNews #LiveUpdates #Politics #செய்திகள் #SriLankaTamilNews

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.