விபத்தில் முதியவர் பலி!!

 


மாத்தளை இராஜ வீதி பொலிஸ் காரியாலயத்திற்கு முன்னால் இன்று (13) காலை 9.00 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் வயோதிபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மாத்தளை கிளையிலிருந்து – கொழும்பு நோக்கி பயணித்த லாப் சமையல் எரிவாயு சிலின்டர்களை ஏற்றிச்சென்ற லொறியின் சில்லில் சிக்குண்டு அவர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் 74வயது மதிக்கத்தக்க, உக்குவளை பகுதியை சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது. குறித்த நபர் உக்குவளையில் இருந்து மாத்தளையில் உள்ள பாலர் பாடசாலைக்கு தனது பேத்தியை அழைத்துச் சென்ற வேலையிலேயே இப்பாரிய விபத்து ஏற்பட்டுள்ளது.

விபத்தில் தூக்கி எறியப்பட்ட பேத்தி பலத்த காயங்களுக்குள்ளாகி மாத்தளை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

லொறியின் சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன் விசாரணைகளின் பின் மாத்தளை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.