திருமண நிகழ்வில் கைகலப்பு- நீதிமன்ற உத்தரவு!!

 


ஹட்டன், கொட்டகலை நகரில் நடைபெற்ற திருமண விசேட நிகழ்வொன்றில் இரு தரப்பினருக்கு இடையே ஏற்பட்ட மோதலை சமரசம் செய்யச் சென்ற திம்புலபத்தனை பொலிஸ் அதிகாரிகளின் கடமைக்கு இடையூறு விளைவித்து, முறுகலில் ஈடுபட்ட குழுவினர் ஜூலை மாதம் 06 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

முக்கிய சந்தேகநபர் உட்பட நால்வர் இன்று (22) சட்டத்தரணி ஒருவர் ஊடாக ஹட்டன் நீதவான் நீதிமன்றில் சரணடைந்தனர். குறித்த சந்தேக நபர்கள் நால்வரையும் ஜூலை மாதம் (06) ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஹட்டன் மாவட்ட நீதிபதியும் நீதவானுமான பீட்டர் போல் உத்தரவிட்டார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.