கனடா தூதரகம் இடமாற்றம்!!
இலங்கை மற்றும் மாலைதீவுக்கான கனடா தூதரகம் (The High Commission of Canada), கொழும்பு 07 இல் உள்ள 5ஆம் லேனிலிருந்து (5th Lane) புதுப்பிக்கப்பட்ட தனது சொந்த வளாகத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக கனடா தூதரகம் மகிழ்ச்சியுடன் அறிவித்துள்ளது.
அதன்படி, தூதரகத்தின் புதிய அலுவலகம் கொழும்பு 07, ஸ்ரீமத் ஆர். ஜி. சேனநாயக்க மாவத்தையில் (Srimath R. G. Senanayake Mawatha) அமையவுள்ளது.
இந்த இடமாற்றமானது, இலங்கை மற்றும் மாலைதீவு அரசாங்கங்களுடனும், பொதுமக்களுடனும் கொண்டுள்ள உறவை மேலும் வலுப்படுத்துவதற்கான கனடாவின் தொடர்ச்சியான அர்ப்பணிப்பைப் பிரதிபலிக்கிறது.
பொதுமக்கள் மற்றும் பார்வையாளர்கள் அனைவரும், வரும் 2026 ஜூன் 24ஆம் திகதி முதல் தங்களது அனைத்து சந்திப்புகள் (Appointments) மற்றும் கடிதப் பரிமாற்றங்களை (Correspondence) புதிய முகவரிக்கு இயக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். புதிய முகவரி: இலக்கம் 6, ஸ்ரீமத் ஆர். ஜி. சேனநாயக்க மாவத்தை, கொழும்பு 07, இலங்கை.

.jpeg
)





கருத்துகள் இல்லை