போலி நாணயத்தாள்களுடன் ஒருவர் கைது!!


 வெல்லம்பிட்டி பகுதியில், 5 ஆயிரம் ரூபா பெறுமதியான 3 போலி நாணயத்தாள்களுடன் சந்தேகநபர் ஒருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

வெல்லம்பிட்டி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொலன்னாவ பகுதியில் பொலிஸாருக்கு கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனையின் போதே நேற்று (14) பிற்பகல் மேற்படி சந்தேகநபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.

கொலன்னாவ பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு கைதாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த சந்தேகநபர் கொலன்னாவ பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் உணவு உட்கொண்டுள்ளதுடன், அதற்கான பணத்தைச் செலுத்துவதற்காக 5 ஆயிரம் ரூபா நாணயத்தாள் ஒன்றை வழங்கியுள்ளார்.

இதன்போது, அந்த நாணயத்தாள் மீது உணவக உரிமையாளருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளதுடன், உடனடியாக இவ்சிடயம் தொடர்பில் உணவக உரிமையாளர், பொலிஸ் நிலையத்துக்கு தகவல் வழங்கியுள்ளார்.


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.