போலிச்சாரதி கைது!!
சாரதி அனுமதிப்பத்திரம் இல்லாமல் அதிக பயணிகளுடன் பேருந்தை பிரதான வீதியில் செலுத்திய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஹட்டன் போக்குவரத்துப் பிரிவு பொலிஸ் அதிகாரிகள் குறித்த நபரை கைது செய்துள்ளனர்.
சந்தேக நபர் ஹட்டன் - டிக்கோயா சலங்கந்த பகுதியிலிருந்து தினமும் சாரதி அனுமதிப்பத்திரம் இன்றி பேருந்தை செலுத்தி வந்துள்ளார்.
பயணித்தின் இடையில் மற்றொரு சாரதிக்கு பேருந்தை ஒப்படைப்பதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கு அமைவாக இந்த சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த பேருந்து ஹட்டன் - சலங்கந்த வழியாக அதிக ஆபத்தான செங்குத்து மற்றும் வளைவுகள் கொண்ட பாதையில் பயணிக்கின்றது. இதனால் பயணிகளின் பாதுகாப்பு கருதி உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டதாக பொலிஸார் கூறுகின்றனர்
சம்பவம் தொடர்பில் பேருந்தின் உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

.jpeg
)





கருத்துகள் இல்லை