ரூபாவின் பெறுமதி உயர்வு!!
கடந்த வெள்ளிக்கிழமையுடன் ஒப்பிடுகையில், இன்றைய தினம் (08) அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் மதிப்பு சற்று அதிகரித்துள்ளதுடன், அதன் விற்பனை வீதம் 342 ரூபாய்க்குக் கீழ் குறைந்துள்ளது.
இலங்கை மத்திய வங்கியின் கூற்றுப்படி, அமெரிக்க டொலரின் கொள்வனவு வீதம் 332.27 ரூபாயில் இருந்து 331.22 ரூபாயாகக் குறைந்துள்ளதுடன், அதன் விற்பனை வீதமும் 342.00 ரூபாயில் இருந்து 341.04 ரூபாயாகக் குறைந்துள்ளது.
அவுஸ்திரேலிய மற்றும் கனேடிய டொலர்கள், யூரோ, ஸ்டெர்லிங் பவுண்ட் மற்றும் சுவிஸ் பிராங்க் உள்ளிட்ட ஏனைய வெளிநாட்டு நாணயங்களுக்கு நிகராகவும் இலங்கை ரூபாயின் மதிப்பு கணிசமாக அதிகரித்துள்ளது.
மேலும், வளைகுடா நாடுகளின் (Gulf) நாணயங்களுக்கு நிகராகவும் ரூபாயின் மதிப்பு சற்று அதிகரித்துள்ளது.

.jpeg
)





கருத்துகள் இல்லை