யாழ் - மொட்டு கட்சி தலைவி கைது!!
யாழ்ப்பாணம் மாவட்டத்தின் பொதுஜன பெரமுன கட்சியின் மகளிர் அணி தலைவி காயா நேற்று(18) பிற்பகல் நெல்லியடி பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
அயல் வீட்டார் செய்த முறைப்பாட்டின் அடிப்படையிலேயே குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அயல் வீட்டாரின் முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைக்கு நேற்று(18) காலை நெல்லியடி பொலிஸ் நிலையத்திற்கு அழைத்த பொலிசார் விசாரணை நிறைவடைந்த பின்னர் குறித்த நபரை கைது செய்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து பருத்தித்துறை நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட நிலையில், 14 நாட்கள் தடுப்பு காவல் வைப்பதற்கு பருத்தித்துறை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அயல் வீட்டாருக்கும் குறித்த நபருக்கும் நீண்ட நாட்களாக இடம்பெற்ற தகராறு காரணமாக ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் அமைப்பாளரது கணவன் மீது அயல் வீட்டார் கடந்த 16 ஆம் திகதி தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இந்த தாக்குதலில் காயமடைந்த குறித்த நபர் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

.jpeg
)





கருத்துகள் இல்லை