மாணவர்கள் மீது கொடூரம்!!

 வவுனியா, இரட்டைப்பெரியகுளம்


குளத்துக்கு அருகில் இரண்டு மாணவர்கள் மீது கொடூரமான முறையில் தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பில் 14 முதல் 17 வயதுக்குட்பட்ட 7 மாணவர்கள் இரட்டைப்பெரியகுளம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சமூக ஊடகங்களில் “வவுனியா சிங்கித்தி பாதாளய”  என்ற தலைப்பில் இந்தத் தாக்குதல் தொடர்பான காணொளி காட்சிகள் பரவியதைத் தொடர்ந்தே பொலிஸார் இந்த கைது நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர்.

இந்த தாக்குதலுக்கு இலக்காகி காயமடைந்த 15 வயதுடைய இரண்டு மாணவர்கள் தற்போது வவுனியா பொது மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கைது செய்யப்பட்ட 7 மாணவர்களும் நேற்று (3) வவுனியா நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, அவர்களை எதிர்வரும் 10ஆம் திகதி வரை கெபிதிகொல்லேவ சான்றளிக்கப்பட்ட சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை இரட்டைப்பெரியகுளம் காவல்துறையினர் தொடர்ந்தும் மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.