யாழில் ஏற்பட்ட தீப்பரவல்!!


 யாழ்ப்பாணம் - அச்சுவேலி, தீர்த்தங்குளம் பகுதியில் ஏற்பட்ட பாரிய தீப்பரவல் தற்போது முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக  தெரிவிக்கபப்டுகின்றது.  

இந்த தீப்பரவல் நேற்றிரவு ஏற்பட்டதாக  அச்சுவேலி பொலிஸார்  கூறியுள்ளனர். எனினும் தீப்பரவலினால் எந்தவிதமான ஆபத்துக்களும் நேரவில்லை என்றும் கூறப்படுகின்றது.

குப்பைக்கு மூட்டிய தீ பிற இடங்களுக்கு பரவியதாகவும், இதில் பல ஏக்கர் புற்தரைகள் தீயில் எரிந்து நாசமாகியுள்ளது. அச்சுவேலி பொலிஸார் மற்றும் மா நகரசபை தீயணைப்பு படையினர் இணைந்து தீயை கட்டுபாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். 

இந்தநிலையில் தீப்பரவலுக்கான காரணம்  தொடர்பில்  அச்சுவேலி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.