சுரேஸ் சாலேவுக்கு மாரடைப்பு!!

 


ஈஸ்டர் தாக்குதல் குறித்து முன்னெடுக்கப்பட்டு வரும்  விசாரணைகளுக்கு  அமைய கைது செய்யப்பட்டுள்ள    அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே, கொழும்பு தேசிய வைத்தியசாலையின் இருதய நோய் சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவருக்கு ஏற்பட்ட மாரடைப்பு காரணமாகவே அவர் அந்தப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவரது சட்டத்தரணி தெரிவித்துள்ளார்.

சுரேஷ் சலே  திடீரென நோய்வாய்ப்பட்டதையடுத்து, வைத்தியசாலையில் அனுமதிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.